சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 குழு.. தனி தனி பொறுப்பு.. லோக் சபா தேர்தல் களத்தில் குதித்த அதிமுக.. அதிரடி அறிவிப்பு!

லோக் சபா தேர்தலில் வெவ்வேறு பணிகளை செய்வதற்காக மூன்று புதிய குழுக்களை அதிமுக கட்சி உருவாக்கி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக் சபா தேர்தலுக்கு 3 தனி குழு அமைத்த அதிமுக- வீடியோ

    சென்னை: லோக் சபா தேர்தலில் வெவ்வேறு பணிகளை செய்வதற்காக மூன்று புதிய குழுக்களை அதிமுக கட்சி உருவாக்கி இருக்கிறது.

    லோக் சபா தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதத்திற்குள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் எல்லாம் தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் தற்போது லோக் சபா தேர்தலுக்காக மூன்று குழுக்களை அதிமுக உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    தொகுதி பங்கீடுகுழு

    தொகுதி பங்கீடுகுழு

    அறிக்கையின்படி லோக் சபா தேர்தலில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சு நடத்த அதிமுக தனி குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் 5 பேர் இருப்பார்கள். கே.பி.முனுசாமி, ஆர். வைத்திலிங்கம், பி. தங்கமணி, எஸ்.பி வேலுமணி, ஜெ.சி.டி பிரபாகர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    வேலை என்ன

    வேலை என்ன

    தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. லோக் சபா தேர்தலில் இதனால் அதிமுக கண்டிப்பாக கூட்டணி வைத்து போட்டியிடும் என்பது உறுதியாகி உள்ளது. சென்ற லோக் சபா தேர்தலில் அதிமுக தனியாக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

    இன்னொரு குழு

    அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கவும் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மட்டும் மொத்தம் 7 பேர் இடம்பிடித்து இருக்கிறார்கள். சி. பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், டி.ஜெயக்குமார், சி.வி சண்முகம், செ. செம்மலை, ரவி பெர்னார்ட், பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

    தேர்தல் பிரச்சாரம்

    தேர்தல் பிரச்சாரம்

    இது இல்லாமல் தனியாக லோக் சபா தேர்தல் பிரச்சார பணிகளை செய்ய அதிமுகவில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை அதிமுக எம்.பி தம்பிதுரை தலைமை தாங்கி வழி நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    2019 Lok Sabha Election: AIADMK forms three separate committees for election works for the first time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X