சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2020 நியூஸ் மேக்கர் : ரஜினிகாந்த் 70: இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை... அனுபவமே பாடம்

ரஜினிகாந்த் பேச வாய் திறந்தாலே அது ட்ரெண்ட்தான், அவரது அரசியல் பயணம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ள நிலையில் 2020ஆம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை ரஜினியின் ட்விட்டர் பதிவுகளை பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லி புதுக்கணக்கை துவக்கினார். மார்ச் மாதத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினி இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை சொல்லி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சாத்தான்குளம் காவல்நிலைய மரண சம்பவம் சமூக வலைத்தளத்தை அதிர வைத்தது. அதற்கும் ட்வீட் போட்ட ரஜினிகாந்த், சத்தியமா விடக்கூடாது என்று பதிவிட்டது ட்ரெண்ட் ஆனது.

கந்த சஷ்டியை இழிவுபடுத்தியவர்களுக்கு எதிராக ட்வீட் பதிவிட்ட ரஜினி கந்தனுக்கு அரோகரா என்று சொல்லி அந்த வார்த்தை உலகம் முழுவதும் டிரெண்ட் செய்தார். தினசரி பத்து ட்வீட் பதிவு செய்வது மாஸ் கிடையாது ஒரு வருடத்திற்கு போட்ட பத்து ட்வீட்டும் மாஸ்தான் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த்.

லேட் பண்ணதால வந்த வினை.. போற வழியெல்லாம் பொத்தென்று விழும் லேட் பண்ணதால வந்த வினை.. போற வழியெல்லாம் பொத்தென்று விழும்

புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்து

Wishing everyone a very happy new year #2020 ... god bless

அனைவருக்கும் மகிழ்ச்சியான புத்தாண்டாக அமைய அமைய வாழ்த்து கூறிய ரஜினிகாந்த் இறைவன் ஆசி கிடைக்கட்டும் என்று கூறி கையெடுத்து கும்பிட்டு பதிவிட்டிருக்கிறார்

 டிஸ்கவரி சேனல்

டிஸ்கவரி சேனல்

டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சிகான படப்பிடிப்பில் பங்கேற்றது பற்றி பதிவிட்டு BearGryllsக்கு நன்றி சொன்னதோடு இது மறக்கமுடியாத நினைவு என்று கூறி லவ் யூ என்று பதிவிட்டிருந்தார் ரஜினி.

இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை

இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை

அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று கூறி பதிவிட்டிருந்தார்.

அரசுக்கு பாராட்டு

அரசுக்கு பாராட்டு

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசை பாராட்டி ரஜினி பதிவிட்டிருந்தது வைரலானது.

ரஜினி விளக்கம்

ரஜினி விளக்கம்

தன்னுடைய வீடியோ பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று விளக்கம் கூறி பதிவிட்டிருந்தார் ரஜினி.

இரங்கல்

இரங்கல்

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார் ரஜினி. இதே போல வசந்தகுமார் எம்.பி மரணம், எஸ்பிபி மரணத்திற்கும் இரங்கல் ட்வீட் பதிவிட்டிருந்தார்.

தீபம் ஏற்றி ட்வீட்

தீபம் ஏற்றி ட்வீட்

கொரோனா முன்கள பணியாளர்களுக்காக மோடி சொன்னதை கேட்டு வீட்டின் முன்பு மனைவி லதா உடன் தீபம் ஏற்றி அதை ட்விட்டரில் பதிவிட்டார் ரஜினிகாந்த்

டாஸ்மாக் எதிர்ப்பு

டாஸ்மாக் எதிர்ப்பு

இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள் என்று பதிவிட்டார் ரஜினி.

 சத்தியமா விடவே கூடாது

சத்தியமா விடவே கூடாது

சாத்தான்குளம் காவல்நிலைய மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து ரஜினி ட்வீட் போட்டது கலவையான விமர்சனங்களை பெற்றது.

 கந்தனுக்கு அரோகரா

கந்தனுக்கு அரோகரா

கந்த சஷ்டி கவசத்திற்கு ஆதரவாக கந்தனுக்கு அரோகரா என்று ரஜினி பதிவிட்ட ட்வீட் 2020ஆம் ஆண்டில் செம வைரலானது.

துரைமுருகன், டிஆர் பாலு

துரைமுருகன், டிஆர் பாலு

தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அனுபவமே பாடம்

அனுபவமே பாடம்

ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம் என்று பதிவிட்டார் ரஜினி.

அரசியல் நிலைப்பாடு

அரசியல் நிலைப்பாடு

என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளத்தில் ஊடகங்களில் வருகிறது; அது என் அறிக்கை அல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இருப்பினும் அறிக்கையில் வந்திருக்கும் என் உடல்நிலை குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்று ரஜினி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை ரஜினி குறிப்பிட்டுள்ளார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்று பதிவிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

தமிழருவி மணியன் நியமனம்

தமிழருவி மணியன் நியமனம்

ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்தார் ரஜினி.

எல்லாத்தையும் மாத்துவோம்

எல்லாத்தையும் மாத்துவோம்

ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை என்று பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த். ரஜினியின் அரசியல் வருகைக்காக பல ஆண்டுகாலமாக காத்திருக்கும் அவரது ரசிகர்கள் ஒவ்வொரு ட்வீட்டையும் ட்ரெண்ட் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

English summary
Rajinikanth launched a new account on his Twitter page saying Happy New Year. Rajini, who met the fans in March, caused a stir by talking about his political stance, saying it is not now or never.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X