சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வித்யாதன் ஸ்காலர்ஷிப் 2020: எஸ்எஸ்எல்சியில் 80% மார்க் வாங்கியவர்கள் உடனே விண்ணப்பிங்க

Google Oneindia Tamil News

சென்னை: வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற செப்டம்பர் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையிலிருந்து வித்யாதன் ஸ்காலர்ஷிப் திட்டம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களில் இருந்து வரும் தகுதியான மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு / எஸ்எஸ்எல்சியில் 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கடுமையான தேர்வுக்கு பிறகு தேர்வு செய்யப்படுவார்கள். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 75 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருத்தல் போதுமானது.

https://www.vidyadhan.org/apply/tamil/219

இந்த கல்வி உதவித்தொகை நேரடியாக அறக்கட்டளையுடன் பதிவுசெய்தவர்கள் அல்லது வெளிப்புற விளம்பரதாரர்களிடமிருந்து பெற்று தரப்படும். பட்டப்படிப்பு படிப்பிற்கான ஸ்காலர்ஷிப் தொகை வருடத்திற்கு 10,000 ரூபாய் முதல் 60,000 வரை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அறக்கட்டளை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

 2020 Vidyadhan Scholarship Program Sarojini Damodaran Foundation

தமிழ்நாடு வித்யாதன் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கல்வி உதவித் தொகை பெறும் திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்திற்குக் கீழ் பெறும் பிற்படுத்தப்பட்டோர் குடும்பங்களின் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

பத்தாம் வகுப்பு 2020 பொதுத்தேர்வில் 80 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். இந்த திட்டத்தில் தற்போது 4300 மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற்றிருக்கின்றனர். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், கோவா, ஓடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் உதவித் பெற்றிருக்கின்றனர்.

 2020 Vidyadhan Scholarship Program Sarojini Damodaran Foundation

இந்த ஆண்டு 2020 கல்வி உதவித்தொகை பொற செப்டம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அக்டோபர் 28 முதல் ஆன்லைனின் தேர்வுகள் ஆரம்பமாகும்.

English summary
Vidyadhan Scholarship Program from Sarojini Damodaran Foundation supports the college education of meritorious students from economically challenged families. The students are selected after completion of 10th grade / SSLC through a rigorous selection process. Currently, Vidyadhan program has around 4300 students across the following states: Kerala, Karnataka, Tamil Nadu, Puducherry, Andhra Pradesh, Telangana, Maharashtra, Gujarat, Goa, and Odisha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X