சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மருத்துவ சேர்க்கையில் குளறுபடி?.. தமிழக தரவரிசைப் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக தரவரிசைப் பட்டியலில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 பேர் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்தாய்வை தொடங்கினார்.

218 students from other states are in TN medical rankings

மருத்துவ சேர்க்கையில் இந்த ஆண்டு கூடுதலாக 350 இடங்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்த நிலையில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 மாணவர்கள் தமிழக மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த 218 பேரில் கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர். சான்றிதழ்கள் சரிபார்த்த பின்னரே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழகத்தில் பிறந்ததற்கான இருப்பிடச் சான்றிதழ் இருந்தால் மட்டும் 218 பேருக்கும் இடம் அளிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.

English summary
218 students from other states are in TN medical rankings. Medical counselling for students in Omanthurar Estate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X