சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போர்ப்ஸ் பட்டியல்: பேஸ்புக் அதிபர் மார்க்கை முந்திய இளம்பெண் கெய்லி ஜென்னர்

போர்ப்ஸ் பட்டியலில் பேஸ்புக் அதிபரை முந்தியிருக்கிறார் கெய்லி ஜென்னர் என்ற இளம்பெண்.

Google Oneindia Tamil News

சென்னை : உலகின் அதிகம் சம்பாதிக்கும் நபர்களின் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் இடம்பிடித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல வணிகப் பத்திரிகையான போர்ப்ஸ், அவ்வப்போது உலகின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த பட்டியலில் நடிகர்கள், பெரிய நிறுவனர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுவர். அவர்களின் ஊதியம், சொத்து மதிப்பு, வருமானம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்படும்.

அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், 10வது இடத்தை பிடித்து பேஸ்புக் அதிபர் மார்க் ஸக்கர்பர்க்கை முந்தியிருக்கிறார் கெய்லி ஜென்னர் எனும் 21 வயது பெண். இவரை பற்றி பேஸ்புக் பத்திரிகை புகழ்ந்து எழுதியுள்ளது. அப்படி என்ன தான் செய்துவிட்டார் இந்த இளம்பெண் என்று விசாரித்தால், பதில் வியப்பை அளிக்கிறது.

சமூகவலைதள விளம்பரம்:

சமூகவலைதள விளம்பரம்:

கெய்லி ஜென்னர் தன்னுடைய காஸ்மெட்டிக் நிறுவனத்தின் தயாரிப்புகளை சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ததோடு ஸ்டோர்களுக்கு சப்ளை செய்து வந்தார். அவரது தயாரிப்புகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, அல்ட்டா நிறுவனம் கெய்லியுடன் கைக்கோர்த்தது.

அபார வளர்ச்சி:

அபார வளர்ச்சி:

அவ்வளவு தான், கெய்லியின் வர்த்தக மதிப்பு பண்மடங்கு உயர தொடங்கிவிட்டது. சில நூறு கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த கெய்லியின் தயாரிப்புகள், பல ஆயிரம் கடைகளில் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. சுமார் ஐந்தரை கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு இருந்த கெய்லியின் வர்த்தகம், ஆறு வார காலத்தில் 36 கோடி அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.

போர்ப்ஸ் பட்டியல்:

போர்ப்ஸ் பட்டியல்:

அழகு சாதன பொருட்கள் விற்பனையில், ஆறு வார காலத்தில் இப்படி ஒரு வளர்ச்சியை எட்டுவது அசாத்தியமானது. அதனால் தான் கெய்லியை போர்ஸ் பத்திரிகை புகழ்ந்து தள்ளுகிறது. இந்த அபார வளர்ச்சியின் காரணமாக, உலகில் அதிகம் சம்பாதிக்கும் நபர்களின் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸ்சக்கர்பர்க்கை முந்தியுள்ளார் கெய்லி.

இது தான் குறை:

இது தான் குறை:

ஆனால் கெய்லியிடம் இருக்கும் ஒரே குறை, இந்த வர்த்தகத்தை அவர் தனது சொந்த உழைப்பால் உருவாக்கவில்லை. தனது பெற்றோர்களின் சொத்தை அடிப்படையாக வைத்து தான் அவர் தனது நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதனால் சுயமாக தன்னை வளர்த்துக்கொண்டவர் என கெய்லியை போர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளதை பலரும் விமர்சித்துள்ளனர்.

English summary
The forbes billionaires list gave tenth place to a 21 years old girl Kylie Jenner who overtook facebook founder Mark Zuckerberg.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X