சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு எலியை பிடிக்க 22 ஆயிரம் ரூபாய்.. எஸ்ஜே சூர்யா போல் சிக்கலில் தவிக்கும் தெற்கு ரயில்வே

Google Oneindia Tamil News

சென்னை: எஸ்ஜே சூர்யா அண்மையில் நடித்த படத்தில் எலியால் கடுமையாக அவதிப்படுவார். இப்போது திட்டதட்ட அதே நிலையில் தான் தெற்கு ரயில்வே அதிகாரிகளும் இருக்கிறார்கள். எலியை பிடிக்க காண்பித்த கணக்கு அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சென்ட்ரலை தலைமையிடமாக கொண்டு தெற்கு ரயில்வே செயல்படுகிறது. தெற்கு ரயில்வே பல்வேறு மாநிலங்களுக்கு இடையே ஏராளமான ரயில்களை இயக்கி வருகிறது. சரக்கு ரயிலகளை இயக்கி வருகிறது.

22 thousand rupees to catch a Rat: Southern Railway

கடந்த ஜீலை மாதம் 17 ஆம் தேதி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பபட்ட கேள்விக்கு தெற்கு ரயில்வே பதில் அளித்துள்ளது. அந்த பதிலில் ஒரு எலியைபிடிக்க சுமார் 2 ஆயிரம் கணக்கு காட்டியிருக்கிறது. இந்த கணக்கு தெற்கு ரயில்வேயில் உள்ள அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பதிலில் தெற்கு ரயில்வேயில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் வரை மூன்று ஆண்டுகளில் மட்டும் 2636 எலிகள் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் சென்ட்ரல், செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம்,ஜோலார் பேட்டை சந்திப்புக்களில் மட்டும் 1715 எலிகள் பிடிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பயிற்சி மையங்களில் இருந்து 921 எலிகள் பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும் எலிகளை பிடிக்க 5.89 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இவர்களின் கணக்குப்படி ஒரு எலியைப் பிடிக்க மட்டும் தென்னக ரயில்வே ரூபாய் 22,334 செலவழித்துள்ளது. தெரியவந்துள்ளது. ரயில்வே துறைக்கு எலியால் எப்போது பிரச்சனை தான், எல்லாம் கணக்கு காட்டுவதிலும் பிரச்சனையை உருவாக்கி உள்ளது எஸ்ஜே சூர்யாவைப் போல தெற்கு ரயில்வேயில் கணக்கு காட்டிய அதிகாரிகள் தவித்து வருகிறார்கள்.

English summary
22 thousand rupees to catch a mouse: Southern Railway reply By RDI
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X