சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நள்ளிரவில் அலறிய சென்னை.. கல்லூரி மாணவரை சுற்றி வளைத்து வெட்டிய கும்பல்.. 5 பேர் கைது..!

கல்லூரி மாணவர் வெட்டி கொலை செய்யப்பட்டதில் 5 பேர் கைதாகி உள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: பிரசாந்துக்கு 22 வயசுதான்.. 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று மொத்தமாக சூழ்ந்து கொண்டு, பிரசாந்த்தை வெட்டி சாய்த்துள்ளது... முன்விரோதத்தினால் நடந்த இந்த கொலையானது சென்னை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 22 வயசு பிரசாந்த், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் காலேஜில் பிஏ 2-ம் வருடம் படித்து வந்துள்ளார்.. ஆனால் இவர் மீது கொடுங்கையூர் ஸ்டேஷனில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாம். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் சொல்கிறார்கள்.

22 year old college student murdered in chennai

இவரது அம்மா மீன் வியாபாரம் செய்து வருகிறார்.. விடிகாலையில் காசிமேட்டுக்கு மீன் வாங்க செல்வது வழக்கம்.. இதற்காக நள்ளிரவே வீட்டை விட்டு கிளம்பிவிடுவாராம்.. இவரது அம்மாவுடன் அம்சா என்பவரும் மீன் வாங்க செல்வார்.. அவர் வீடு சற்று தொலைவில் உள்ளதால், அழைத்து வருவதற்காக பைக் எடுத்து கொண்டு சென்றார் பிரசாந்த்.

அப்போது, நள்ளிரவு நேரம் என்பதால், 7 பேர் கொண்ட கும்பல் பிரசாந்தை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி தள்ளிவிட்டு தப்பிவிட்டது.. பிரசாந்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.. வியாசர்பாடி போலீசாருக்கும் தகவல் சொன்னார்கள்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரசாந்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

கலக்கப்போவது முதல்வர்... கலங்கப்போவது கொரோனா... நமது அம்மா நாளிதழ் கட்டுரை கலக்கப்போவது முதல்வர்... கலங்கப்போவது கொரோனா... நமது அம்மா நாளிதழ் கட்டுரை

ஆனால் வழியிலேயே பிரசாந்த் உயிர் பிரிந்தது.. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. அந்த 7 பேரும் தலைமறைவாகி இருந்த நிலையில், வியாசர்பாடியைச் சேர்ந்த சந்துரு, பரத், சாக்ரடீஸ், சதாகர், சூர்யபிரகாஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
22 year old college student murdered in chennai due to prejudice
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X