சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மதுரை, கோவை உள்பட 24 ரயில்களை தனியார்கள் இயக்க போகிறார்கள்.. விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: 151 ரயில்களை தனியார்கள் இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது இதில் தமிழகத்தின் பல்வேறு வழித்தடங்களில் 24 ரயில்களை தனியார்கள் இயக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால கட்டணங்கள் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது.

நாட்டில் உள்ள 109 வழித்தடங்களில் 151 நவீன ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டத்தில் தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பங்களை ரயில்வே அமைச்சகம் வரவேற்று உள்ளது. 35 கோடி மதிப்புள்ள இத்திட்டம் நிறைவேற்றப்பபட்டு 2023ம் ஆண்டு ஏப்ரலில் நாடு முழுவதும் தனியார்கள் ஓடும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

24 Private trains liklyto operate in tamil nadu

இதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளது என்றும் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான கட்டணம் விமானம் மற்றும் போக்குவரத்துக்கு இணையாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழத்தில் பல்வேறு வழித்தடங்களில் 24 தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அவற்றின் சில விவரங்களை பார்ப்போம்

2023 ஏப்ரல் முதல் தனியார் ரயில்கள் ஓடும்.. விமானங்களுக்கு இணையான கட்டணம்.. ரயில்வே2023 ஏப்ரல் முதல் தனியார் ரயில்கள் ஓடும்.. விமானங்களுக்கு இணையான கட்டணம்.. ரயில்வே

இரு வழிகளில் இயக்கப்ட உள்ள தனியார் ரயில்கள்

  • சென்னை - மதுரை
  • புதுச்சேரி - செகந்திராபாத் (வழி சென்னை)
  • சென்னை - கோவை
  • சென்னை திருநெல்வேலி
  • திருச்சி - சென்னை
  • சென்னை- கன்னியாகுமரி
  • கன்னியா குமரி - எர்ணாகுளம்
  • சென்னை - புதுடெல்லி,
  • சென்னை - ஹவுரா
  • சென்னை - புதுச்சேரி
  • மங்களூர் - சென்னை (வாராந்திர ரயில்)
  • சென்னை - மும்பை (வாரம் இருமுறை)
  • கொச்சுவேலி - கவுஹாத்தி (வாரத்தில் மூன்று நாட்கள்)

மேற்கண்ட ரயில்களை தனியார் இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

English summary
24 Private train operations are likely to begin by April 2023 in tamil nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X