சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடேங்கப்பா... இவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகளா... தலைசுற்ற வைக்கும் குப்பை கணக்கு

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் 26,000 டன் பிளாஸ்டிக் கழிவுப்பொருள் தேங்கிகிடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடு முழுவதும் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகளை வெளியிடும் நகரங்களில் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு நாளும் 25,940 டன் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. அதில் 40 சதவீத குப்பைகள் கூட சேகரிக்கப்படுவதில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் ஒட்டுமொத்தமாக 50% க்கும் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுகிறது.

மத்திய அரசு அறிவுறுத்தல்

மத்திய அரசு அறிவுறுத்தல்

ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அந்த வகையில், பிளாஸ்டிக் பயன்பாடு ஓரளவிற்கு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

25,940 டன் பிளாஸ்டிக் கழிவுகள்

25,940 டன் பிளாஸ்டிக் கழிவுகள்

அதில், இந்தியாவில் ஒரு நாளைக்கு 25,940 டன் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. அக்கழிவுகளில் 40 சதவீதம் கூட சேகரிக்கப்படாமல் கழிவுநீர் வடிகால்களிலும், ஆறுகளிலும் தேங்கிக் கொள்கின்றன. திறந்தவெளியில் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கும், உடல் நலத்திற்கும் தீங்கு ஏற்படும்.

2 வது இடத்தில் தமிழகம்

2 வது இடத்தில் தமிழகம்

மேலும், ஒரு நாளைக்கு 689 டன் பிளாஸ்டிக் பொருட்களை வெளியிட்டு இந்தியாவிலேயே டெல்லி முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 429 டன் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி சென்னை இரண்டாம் இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் கொல்கத்தா (425 டன்), மும்பை (408 டன்), பெங்களூரு (313 டன்), அகமதாபாத் (241 டன்), ஹைதராபாத் (199 டன்), சூரத் (149 டன்), கான்பூர் (106 டன்), புனே (101 டன்) ஆகிய நகரங்கள் உள்ளன.

நகரங்களில் ஆய்வு

நகரங்களில் ஆய்வு

60 முக்கிய நகரங்களில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆய்வு நடத்தியது. அதன்படி, நகரங்களில் நாளொன்றுக்கு 4,059 டன் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுபொருட்களின் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு 2022ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சமாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களையாவது ஒழிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
India has 26,000 tonnes of plastic waste, Central Pollution Control Board (CPCB) Report
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X