சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னைக்கு ஹேப்பி நியூஸ்.. 25,000 ரெம்டெசிவிர் மருந்து வந்து சேர்ந்தது.. கொரோனா சிகிச்சைக்கு!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 25 ஆயிரம் எண்ணிக்கையிலான ரெம்டெசிவிர் மருந்து சென்னை வந்தடைந்தது.. இதனால், தொற்று எண்ணிக்கை மேலும் கட்டுப்படுத்தப்படும் என்று நம்பிக்கையும் தமிழக மக்களுக்கு பிறந்துள்ளது.

தளர்வுகளை அறிவித்தாலும், தொற்று எண்ணிக்கை இன்னமும் நமக்கு குறையவில்லை.. நாளுக்கு நாள் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை பெருகியே வருகிறது.

எனினும், தமிழக அரசு தன் முயற்சியை சிறிதும் கைவிடவில்லை.. அதனால்தான் பலரும் குணமடைந்து வருகின்றனர்... இந்தியாவிலேயே அதிகமாக குணமடைபவர்களின் விகிதம் தமிழ்நாட்டில்தான்.

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு ஊசி...மனித பரிசோதனை நேற்று துவக்கம்!! இந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு ஊசி...மனித பரிசோதனை நேற்று துவக்கம்!!

நடவடிக்கை

நடவடிக்கை

தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது... அதன் ஒரு பகுதியாகத்தான், அரசு ஆஸ்பத்திரிகளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் என்ற மருந்துகளை கொண்டு சிகிச்சை தரப்படுகிறது.

தொற்று

தொற்று

தொற்றை குணப்படுத்த மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத காரணத்தால், நோயின் தாக்கத்தை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த ‘ரெம்டெசிவிர்' என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரி, ஓமந்தூரார் ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகளுக்கு அவர்களின் அனுமதி பெற்று வழங்கப்பட்டது. அதற்கேற்றபடி தொற்றை கட்டுப்படுத்துவதில் அவை பயனளிக்கவும் செய்கின்றன.

சென்னை

சென்னை

இந்த மருந்து விலை உயர்ந்தது... இதனை தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழகம் கொள்முதல் செய்து வருகிறது. இந்த மாதம் 2 லட்சம் எண்ணிக்கை ரெம்டெசிவிர் மருந்துக்கு ஆர்டர் செய்யப்பட்டிருந்தது.. அதன்படி, முதல்கட்டமாக 25 ஆயிரம் மருந்துகள் சென்னைக்கு வந்து சேர்ந்தன.. இனி இந்த மருந்துகளை ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பிரித்தனுப்பும் பணிகள் நடந்து வருகிறது.

ரெம்டெசிவிர்

ரெம்டெசிவிர்

பல்வேறு மாநிலங்களில் செயல்படும் நிறுவனங்களிடம் 2 லட்சம் எண்ணிக்கையில் ரெம்டெசிவிர் மருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இப்போது, 25 ஆயிரம் மருந்துகள் வந்துள்ளதால், மீதமுள்ள ஒரு லட்சத்து 75 ஆயிரம் மருந்துகள் அடுத்த மாதத்துக்குள் வந்துவிடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் தொற்று பாதிப்பு வீதம் மேலும் குறையும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.

English summary
25 thousand Remdesivir arrived in Chennai to covid19
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X