சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளிநாடு வாழ் 26,000 தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள்: திமுக வழக்கில் மத்திய அரசு பதில்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க இதுவரை 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 29 விமானங்கள் மூலம் 26 ஆயிரம் தமிழர்கள் மீட்கப்படுவர் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக் கோரி தி.மு.க., சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய பெஞ்ச் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

26,000 Tamils will return from abroad, says Centre

அப்போது தி.மு.க., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கில் வெளிநாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர்? எத்தனை விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன? வந்தே பாரத் அல்லது வேறு வகையில் கூடுதல் விமானங்கள் இயக்க திட்டம் உள்ளதா? நிதியுதவி, தங்குமிடம், உணவு வசதிகள் வழங்கப்பட்டதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது எனக் குறிப்பிட்டார்.

அதேபோல, விமானங்கள் தரையிறங்க அனுமதியளிப்பது குறித்து தமிழக அரசின் நிலைபாட்டையும் தெரிவிக்கவும் உத்தரவிட்டிருந்தது. கடந்த விசாரணையின் போது, மத்திய அரசு 26,368 பேர் விண்ணப்பம் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் வழக்கறிஞர் வில்சன் சுட்டிக் காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 80 விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டு, 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இன்னும் 29 விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள 26 ஆயிரம் பேர் மீட்கப்படுவர் எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் பதில் மனு கிடைக்கப்பெறாததால், வழக்கின் விசாரணையை நீதிபதிகள் வரும் 29-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
சென்னை: வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க இதுவரை 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 29 விமானங்கள் மூலம் 26 ஆயிரம் தமிழர்கள் மீட்கப்படுவர் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம்.. நிர்வாணமாக நிற்க வைத்து.. ரத்தம் சொட்ட சொட்ட அடித்தனர்.. ஜெயராஜ் மனைவி கதறல்!சாத்தான்குளம்.. நிர்வாணமாக நிற்க வைத்து.. ரத்தம் சொட்ட சொட்ட அடித்தனர்.. ஜெயராஜ் மனைவி கதறல்!

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக் கோரி தி.மு.க., சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய பெஞ்ச் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தி.மு.க., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கில் வெளிநாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர்? எத்தனை விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன? வந்தே பாரத் அல்லது வேறு வகையில் கூடுதல் விமானங்கள் இயக்க திட்டம் உள்ளதா? நிதியுதவி, தங்குமிடம், உணவு வசதிகள் வழங்கப்பட்டதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது எனக் குறிப்பிட்டார்.

அதேபோல, விமானங்கள் தரையிறங்க அனுமதியளிப்பது குறித்து தமிழக அரசின் நிலைபாட்டையும் தெரிவிக்கவும் உத்தரவிட்டிருந்தது. கடந்த விசாரணையின் போது, மத்திய அரசு 26,368 பேர் விண்ணப்பம் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் வழக்கறிஞர் வில்சன் சுட்டிக் காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 80 விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டு, 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இன்னும் 29 விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள 26 ஆயிரம் பேர் மீட்கப்படுவர் எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் பதில் மனு கிடைக்கப்பெறாததால், வழக்கின் விசாரணையை நீதிபதிகள் வரும் 29-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

English summary
The Centre today informed the Madras High Court that 12,000 Tamils will return from abroad through 29 Flights.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X