சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் 28 புதிய பூங்காங்கள்! புது பொலிவுபெறப் போகும் தலைநகரம்!

Google Oneindia Tamil News

சென்னை: சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகரில் புதிதாக 28 பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.

வீட்டிலேயே அடைந்து கிடக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மாலை நேரப் புத்துணர்வை தரும் வகையில் புதுப் பொலிவுடன் இந்த பூங்காக்கள் உருவாக இருக்கின்றன.

இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளதால் விரைவில் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை விலகியது.... இனி வறண்ட வானிலைதான் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு வடகிழக்கு பருவமழை விலகியது.... இனி வறண்ட வானிலைதான் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காத்துறையின் சார்பில் 718 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள 547 பூங்காக்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசமும், 111 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையில் தனியார் வசமும், ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பூங்காக்கள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

28 புதிய பூங்காக்கள்

28 புதிய பூங்காக்கள்

அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்த சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் 28 பணிகளுக்கு அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டு ரூ. 24.43 கோடி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், 23 பூங்காக்கள் ரூ 18.48 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட உள்ளன.

புதுப் பொலிவு

புதுப் பொலிவு

5 பூங்காக்கள் ரூ 5.95 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளன. 28 பூங்கா திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகு பணியாணை வழங்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும், இந்த பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு பகுதி, திறந்த வெளியில் உடற்பயிற்சி கருவிகள், சுற்றுச்சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள், புல் தரைகள், பொதுமக்களுக்கான கழிவறை மற்றும் குடிநீர் வசதி, மின்விளக்குகள் உட்பட பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

பயன் தரும்

பயன் தரும்

சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள 28 பூங்காக்களும் முழுமையான அடிப்படை வசதிகளுடன் கட்டமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. காலை மற்றும் மாலை நேர நடைபயிற்சி, குழந்தைகள் பொழுதுபோக்கு, என பொதுமக்கள் பலருக்கும் பயன் அளிக்கக் கூடிய வகையில் பூங்காக்களை நிறுவ இருப்பது கூடுதல் சிறப்பம்சாகும்.

English summary
28 new parks are being set up in Chennai corporation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X