சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிர வைக்கும் அகிலா.. பல பாஷை தெரியும்.. அதிர வைக்கும் நெட்வொர்க்.. திருடுவதில் எக்ஸ்பர்ட்!

ஒரு கிராமமே திருட்டு செயலில் ஆந்திராவில் ஈடுபட்டு வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அகிலா என்ற திருட்டு பெண்ணை கைது செய்யவும்தான், அதிர்ச்சி தகவல்கள் ஒவ்வொன்றாக வெளி வந்து, நம்மை அதிர வைத்து கொண்டுள்ளது.

சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் ஜூலியா.. இவருக்கு 80 வயதாகிறது.. கடந்த 3ம் தேதி பெரம்பூர் சர்ச் அருகே ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அதே ஆட்டோவில் 3 பெண்களும் வந்தனர். ஜூலியாவிடம் பேச்சு தந்த அவர்கள், "உங்க கழுத்தில் செயின் அறுந்து விழறது போல இருக்கு.. பத்திரமா கழட்டி வெச்சுக்குங்க" என்று சொன்னார்கள்.

ஜூலியாவும் 3 சவரன் செயினை கழட்டி, தன் பைக்குள் வைத்து கொண்டார்.. வீட்டிற்கு வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது செயினை காணவில்லை என்று.. அதனால் போலீசில் இதை பற்றி புகார் செய்யவும், விசாரணை ஆரம்பமானது. அப்போதுதான் 3 பேரும் ஆந்திராவில் தலைமறைவாகியதாக அறிந்து போலீசார் அங்கு சென்றனர்.

மகளை வெட்டி.. உடலை துண்டாக்கி.. சூட்கேஸில் அடைத்து வைத்து வீசி எறிந்த தந்தை.. ஷாக் சம்பவம்மகளை வெட்டி.. உடலை துண்டாக்கி.. சூட்கேஸில் அடைத்து வைத்து வீசி எறிந்த தந்தை.. ஷாக் சம்பவம்

திருட்டு கிராமமே

திருட்டு கிராமமே

அப்போது 2 முக்கிய திடுக் தகவல்கள் வெளியானது.. அகிலாவின் கிராமமே திருட்டு குடும்பங்கள் வசிக்கும் கிராமம் என்கிறார்கள். கிராமத்தின் பெயர் சித்தூர் குப்பம்.. அகிலாவை கைது செய்ய வந்திருக்கிறோம் என்பதுமே கிராமமே திரண்டு வந்துவிட்டது. அகிலாவை கைது செய்யக்கூடாது என்றும், நம் தனிப்படை போலீசாரை அங்கிருந்து செல்ல விடாமலும், அந்த ஊர் மக்கள் தடுத்தனர்.

விசாரணை

விசாரணை

விஷயம் விபரீதமானதும்தான், அம்மாநில போலீசாரின் உதவியை நம் போலீசார் கேட்டுள்ளனர். பிறகு அங்கிருந்த லோக்கல் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டு, அதன்பின்னரே சென்னைக்கு அகிலா அழைத்து வரப்பட்டார்.

அலமேலு, கனகா

அலமேலு, கனகா

இது ஒரு குக்கிராமம்.. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு உள்ளன.. தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, போன்ற மாநிலங்களுக்கு இந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் திருடுவதற்காகவே அனுப்பி வைக்கப்படுகிறார்களாம். அதில் ஒருவர்தான் அகிலா.. இவருடன் சேர்ந்து திருடிய அந்த பெண்கள் பெயர் அலமேலு, கனகா. அவர்கள் இப்போது தலைமறைவாகி உள்ளனர்.

தனி பயிற்சி

தனி பயிற்சி

இவர்கள் ஒரு டீம் என்றால், இதுபோல டீம்கள் அந்த கிராமத்தில் உள்ளதாம். இவர்களுக்கு எல்லாம் தலைவர்களும் அந்த கிராமத்தில் உள்ளனர்.. கொள்ளையடிப்பதில் ஒரு பங்கு இவர்களுக்கு செல்கிறது.. இவர்களுக்கு திருடுவதற்கு தனி பயிற்சியும் தரப்படுகிறதாம்.

திறமைசாலிகள்

திறமைசாலிகள்

வயதானவர்களை எப்படி திசை திருப்பி கொள்ளை அடிப்பது என்பதில் அகிலா & கோ படு திறமைசாலிகள் என்கிறார்கள்... 3 பேருமே வயதான பெண்கள் செல்லும் ஆட்டோவில் ஏறி கொள்வார்களாம்.. உங்கள் செயின் அறுந்துவிழுவதைப் போல உள்ளது என்று ஒருவர் சொல்ல.. இன்னொருவர் செயினை கழட்டி உதவி செய்ய.. மற்றொருவர் அதை பையில் வைக்க உதவுவதுபோல நடிப்பாராம்.. கடைசியில் செயின் 3 பேரின் கைக்கு அலேக்காக வந்துவிடும்

புழலில் அகிலா

புழலில் அகிலா

5 வருடமாக அகிலா கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்.. கன்னடம், தமிழ் என மாநிலங்களில் கொள்ளை அடிப்பதற்கேற்ப சரளமாக பேசுகிறார்.. ஏகப்பட்ட வழக்கும் இவர்மீது உள்ளது என்கிறார்கள். இப்போது அகிலா புழலில் உள்ளார்.. இனி இவரிடம் நடக்கும் தொடர் விசாரணையில் இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

English summary
28 year old andhra woman thief akila arrested in by chennai police and investigation is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X