சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொங்கல்.. 29,213 சிறப்பு பஸ்கள் ரெடி.. எந்த ஊருக்கு எந்த பஸ் நிலையத்திலிருந்து கிளம்பும் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கலை முன்னிட்டு, சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கும், பிற நகரங்களிலிருந்தும் 29,213 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

29,213 special buses would be operated in Tamilnadu for Pongal
  • சென்னையில் இருந்து மட்டும் 4,950 சிறப்புப் பேருந்துகள் பல நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளன.
  • கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட ஊர்களிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்
  • செங்குன்றம் வழியாக ஆந்திர மார்கமாக செல்லும் பேருந்துகள், மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும்

சிங்கப் பெண்ணே.. தீபிகா படுகோன் மாஸ்.. ஜேஎன்யூ பல்கலைக்கழகத்திற்கு வருகை.. மாணவர்களுடன் கைகோர்ப்புசிங்கப் பெண்ணே.. தீபிகா படுகோன் மாஸ்.. ஜேஎன்யூ பல்கலைக்கழகத்திற்கு வருகை.. மாணவர்களுடன் கைகோர்ப்பு

  • கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூா் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள், கே.கே. நகா் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் கிளம்பும்
  • திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் செல்லும் பேருந்துகள், தாம்பரம் சானடோரியம் (மெப்ஸ்) பஸ் நிலையத்திலிருந்து கிளம்பும்
  • திண்டிவனம் மார்கமாக செஞ்சி மற்றும் திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூா், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகள், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிளம்பும்.
  • வேலூா், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூா், சித்தூா் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும்.
  • நெல்லை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூா், நாகா்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூா், எா்ணாகுளம் மற்றும் பெங்களூரூ நகரங்களுக்கு செல்லும் பஸ்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்பட உள்ளன.
  • சிறப்பு பேருந்துகளுக்காக சென்னையில் மட்டும் 17 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
  • கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 முன்பதிவு மையங்கள், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் ஒன்று, பூவிருந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் திறக்கப்படும்.
  • ஜனவரி 9ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு நடைபெறும், சிறப்புப் பேருந்துகள் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை இயக்கப்படும்
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் செல்ல அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் சிறப்பு பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
English summary
Transport Minister Vijayabaskar said that 29,213 special buses would be operated from Chennai to various cities and towns for Pongal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X