• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"அத்தே.. மருமகனே".. மொளைச்சு மூணு இலை விடலை.. அதிர வைத்த 2k கிட்ஸ் லவ்வு.. வீட்டுக்கு ஓடிவந்த ஆணையம்

|

சென்னை: 15 வயசுகூட ஆகல.. மொளைச்சி மூணு இலையே விடல, லவ்வு கேக்குதா என்று சோஷியல் மீடியாவில் சிறுவன், சிறுமியின் வீடியோ வைரலாக பரவிய விவகாரத்தில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

ட்ரெண்ட் ஆக வேண்டும் என்ற பேராசை இளைய சமுதாயத்திடம் தலைதூக்கி உள்ளது.. அந்த வகையில், கிட்டத்தட்ட 15 வயதுடைய மீசை கூட முளைக்காத சிறுவனும், சிறுமியும் வீடியோ காலில் பேசிய வீடியோ ஒன்று கடந்த வாரம் சோஷியல் மீடியாவில் வைரலாகியது..

இருவரும் டூயட் பாடி இன்ஸ்டாகிராமில் பதிவுகளை போட்டு வந்தனர்..திடீரென ஒரு வீடியோவில், இந்த சிறுவன் கண்ணீர் விட்டு அழுகிறார்.. அதை பார்த்த அவரது அத்தைப்பெண் "அவரை அழவேண்டாம்ன்னு சொல்லுங்க அத்தை.. எனக்கு கஷ்டமா இருக்கு.." என்று சொல்கிறார்..

கணவன், மாமியாரின் கொடுமை.. வீடியோ பதிவு செய்துவிட்டு இளம்பெண் தற்கொலை கணவன், மாமியாரின் கொடுமை.. வீடியோ பதிவு செய்துவிட்டு இளம்பெண் தற்கொலை

ஆறுதல்

ஆறுதல்

அதற்கு சிறுவன் கவலைப்படாதே.. எல்லாத்தையும் பார்த்துக்கலாம் என சிறுமிக்கு ஆறுதல் சொல்ல, அந்த அத்தையோ, மருமகனே என்று கூப்பிட்டு ஆறுதல் சொல்கிறார்.பிஞ்சிலேயே இந்த பிள்ளைகள் இப்படி இருக்கிறார்களே என்று 90s கிட்கள் அதிர்ந்து போயினர்.. சிறுவர்கள் தான் இப்படி என்றால் அந்த வீட்டு பெற்றோர்களும் இதற்கு ஆதரவா என்று சோஷியல் மீடியாவில் ஏராளமானோர் திட்டி தீர்த்தனர்.

 ஜிபி முத்து

ஜிபி முத்து

"உனக்கு மீசையே இல்ல, உனக்கு லவ்வு ஒரு கேடா... மொளைச்சி மூணு இலையே விடல அதுக்குள்ள் லவ்வா என்று கேள்விகளை எழுப்பினர்.நம்ம ஜிபி முத்து கூட இதை பற்றி கடுமையான விமர்சன வீடியோ போட்டிருந்தார்.. மீசை கூட முளைக்கலையே.. உனக்கு.. இந்த வயசுலேயே லவ்வாடா என்று வழக்கமான அவரது பாணியில் திட்டியிருந்தார். இந்த நிலையில் இந்த சிறாருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் பலரது புகார்களால் முடக்கப்பட்டது.

 விசாரணை

விசாரணை

இந்த வீடியோ பலரது கடுமையான விமர்சனத்தை பெற்ற நிலையில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வீடியோக்களை பார்க்கும் சிறுவர், சிறுமியர் தவறான உதாரணமாக எடுத்து பாதிக்கப்படலாம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு கடலூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வீடியோ

வீடியோ

வீடியோக்களின் ஐபி முகவரி வைத்து, சைபர் போலீசாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட சிறுவர், சிறுமியர் இருக்கும் வீட்டுக்கு சென்றுள்ளனர்.. இவர்கள் கடலூரில் இருக்கிறார்கள்.. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் பிரிவின் எஸ்பி ஜெயஸ்ரீ மற்றும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நிர்வாகி சரண்யா மற்றும் கடலூர் மாவட்ட அதிகாரிகள் என 10 மேற்பட்டோர் சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோரிடம் 3 மணி நேரமாக விசாரணை நடத்தினர்..

 மன்னிப்பு

மன்னிப்பு

இறுதியில் பெற்றோரை கடுமையாக எச்சரித்தனர்.. பிறகு சிறுமியிடம் தனியாக விசாரணை நடத்தியதில், புகழ் பெறுவதற்காகவே, சிறுவன் சொல்லிதான் இந்த வீடியோவை செய்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்... இறுதியில் அந்த சிறுமி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இதையடுத்து சிறுமியின் செயலை மன்னித்து, அந்த வீடியோவை பெரும்பாலானோர் வரவேற்று வருகின்றனர்.

 அதிகாரிகள்

அதிகாரிகள்

அதேபோல, சிறுவன் வீட்டிற்கும் அதிகாரிகள் சென்றுள்ளனர்.. இதுபோலவே விசாரணை நடத்தி, போதுமான அறிவுறைகளை வழங்கி உள்ளனர்.. சிறுவர்கள் இப்படி தவறு செய்தால், பெற்றோர்கள்தான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். காலம் இப்படி கெட்டுப் போயிருக்கே.. கொரோனாவை சமாளிக்கிறதா அல்லது இதுங்களை சமாளிக்கிறதான்னே தெரியலை!

English summary
2K Kids "Marumagaley" viral video kid regretted
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X