சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகம் முழுவதும் 2-ம் கட்ட மெகா முகாம்... 30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 2-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய 2-வது கட்ட மெகா முகாமில் மொத்தம் 30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Tamilnadu vaccinated 21 lakhs people! Milestone in Mega Drive | OneIndia Tamil

    தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்கிறது. தமிழகத்தின் கிராமங்கள் வரை கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது,.

    ஆளுநர் ரவிக்கு தமிழகத்தில் பெரிதாக வேலை இருக்காது... கொங்கு ஈஸ்வரன் நம்பிக்கை..! ஆளுநர் ரவிக்கு தமிழகத்தில் பெரிதாக வேலை இருக்காது... கொங்கு ஈஸ்வரன் நம்பிக்கை..!

    28,91,000 பேருக்கு தடுப்பூசி

    28,91,000 பேருக்கு தடுப்பூசி

    தமிழகம் முழுவதும் கடந்த கடந்த 12-ந்தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. மொத்தம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மொத்தம் 28,91,000 பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டது.

    மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

    மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

    இதையடுத்து இன்று 2-ம் கட்டமாக தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் நடைபெறுகிறது. இன்றைய 2-ம் கட்ட முகாமில் மொத்தம் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் சுமார் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தடுப்பூசி பற்றாக்குறை

    தடுப்பூசி பற்றாக்குறை

    கடந்த 17-ந் தேதி 2-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருந்தது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் கிடைக்கப்பெறாத சூழலில் இன்றைக்கு முகாம் நடைபெறுகிறது. கடந்த முறை 28 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருந்த நிலையில், கூடுதல் தடுப்பூசிகளை செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை இந்த முகாம்களில் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளலாம்.

    விருதுநகரில் ஆட்சியர் ஆய்வு

    விருதுநகரில் ஆட்சியர் ஆய்வு

    விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் நோக்கில் 1067 மையங்களில் தடுப்பூசி முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சூலக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்பொழுது தடுப்பூசி செலுத்தும் மையங்களில் தேவைகள் குறித்தும் கடைபிடிக்கப்படும் நெறிமுறைகள் குறித்தும் மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தார்.

    கரூர் முகாம்

    கரூர் முகாம்

    கரூரில் 2வது வாரமாக மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது - 624 முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறைந்தளவு பொதுமக்களே தடுப்பூசி செலுத்தி வந்ததால் மையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. கரூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 9,03,245 பேர். இதில் 5,97,693 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 4,12,552 பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இப்பணியில் 3744 பேர் ஈடுபட்டுள்ளனர். இன்றைய முகாமில் 1 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Tamil Nadu government today hold mega COVID vaccination camp across the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X