சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சொன்னார்.. சொன்னபடி குறைந்தது.. சபாஷ் டாக்டர் ராதாகிருஷ்ணன்.. ஒரே நாளில் 3793 பேர் டிஸ்சார்ஜ்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து 3,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது கிட்டதட்ட இன்றைய பாதிப்பில் 99.9 % அல்லது 100 சதவீதம் என்றே சொல்லலாம்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151 ஆக ஆனது. கடந்த 4 தினங்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் 4 ஆயிரத்தை தாண்டியது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மாநகரில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 68,254 ஆகும். இதுவரை 62,778 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகம் முழுக்க.. ஒரே நாளில் 3827 பேருக்கு கொரோனா.. பாதிப்பு குறைந்தாலும், அதிகரித்த பலி எண்ணிக்கை தமிழகம் முழுக்க.. ஒரே நாளில் 3827 பேருக்கு கொரோனா.. பாதிப்பு குறைந்தாலும், அதிகரித்த பலி எண்ணிக்கை

எண்ணிக்கை

எண்ணிக்கை

இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா பாதிப்பு குறித்த எண்ணிக்கை வெளியானது. அதில் கடந்த 3 நாட்களாக 4000-த்தை தாண்டிய கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்தது. அதாவது 3,827 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.

பாதிப்பு அதிகம்

பாதிப்பு அதிகம்

இத்தனை நாட்களாக பாதிப்பு அதிகம், பாதிப்பு அதிகம் என மக்கள் அச்சமடைந்து வந்தனர். ஆனால் இன்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து மீண்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,793 ஆக உயர்ந்துள்ளது. இது மிகவும் நம்பிக்கை தரும் செய்தியாகும். இதன் மூலம் கொரோனாவால் மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 66,571 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதாரத் துறை

சுகாதாரத் துறை

இதற்கு காரணம் அரசு மருத்துவமனை மற்றும் சுகாதாரத் துறையின் சிறப்பான செயல்பாடுகளே. சுகாதாரத் துறை செயலாளராக ஜே ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றவுடன் டெஸ்டிங்கையும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவே பொதுமக்கள் கருதுகிறார்கள். ஜே ராதாகிருஷ்ணன் செயலாளராக பொறுப்பேற்றவுடன் அவர் சொன்னப்படி டெஸ்டிங்கையும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையையும் அதிகரித்து விட்டார்.

திரும்பவில்லை

திரும்பவில்லை

இதுவரை 1,14,978 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 34,782 மாதிரிகளில் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதுவரை 13 லட்சம் சளி மாதிரிகளில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. எனவே அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் என டீம் ஒர்க் செய்ததே இந்த பெரும் வெற்றிக்கு காரணமாகும். இதுவரை தமிழகத்தில் இத்தனை அதிகம் பேர் ஒரே நாளில் வீடு திரும்பியதில்லை.

Recommended Video

    Health Tips : உடல் அசதி, உடல் வலி, தலை வலியா? | Dr Y Deepa explains

    English summary
    3,793 recovered from corona discharged from various hospitals in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X