சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அட சூப்பரால்ல இருக்கு! .. தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் 3 பெண் எம்பிக்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திலிருந்து டெல்லிக்கு 3 பெண் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுவை சேர்த்து திமுக 38 நாடாளுமன்ற தொகுதியிலும் , அதிமுக ஒரே ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

அது போல் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகவின் வெற்றி கணிசமான அளவு நடைபெற்றது. இந்த நிலையில் சென்னையிலிருந்து 3 பெண் எம்பிக்கள் டெல்லிக்கு செல்கின்றனர்.

மக்களவை தேர்தலில் தோல்வியுற்ற மல்லிகார்ஜுன கார்கே.. வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததால் அதிர்ச்சி மக்களவை தேர்தலில் தோல்வியுற்ற மல்லிகார்ஜுன கார்கே.. வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததால் அதிர்ச்சி

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அவர்களில் திமுகவை சேர்ந்த கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் காங்கிரஸின் ஜோதிமணி ஆகியோர் டெல்லி செல்கின்றனர். இவர்களது செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

கரூர் மக்கள்

கரூர் மக்கள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரச்சினைகளையும் தண்ணீர் பிரச்சினையையும் தீர்ப்பது குறித்து கனிமொழியின் திட்டங்களை பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அது போல் கரூரில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து தேர்தல் பிரசாரத்தின் போதே கரூர் மக்களிடம் இருந்து ஜோதிமணி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

தீர்வு

தீர்வு

தென் சென்னையில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை ஏற்படுத்தவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்குறுதி அளித்துள்ளார். அந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு ஏற்படுமா என மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

எம்பிக்கள் செயல்பாடு

எம்பிக்கள் செயல்பாடு

முன்னாள் எம்பிக்களின் செயல்பாடே இவர்கள் பெற்ற வெற்றிக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த 3 பெண்களும் தொகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வாழ்த்துகள்.

English summary
3 female MPS are going to Delhi from Tamilnadu. People of respective constituencies expects their best.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X