சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொஞ்ச நேரம் ரூமுக்குள்ள போங்க.. பொண்ணு உள்ளதான் இருக்கா.. உள்ளே போனா!!!!

திருமண ஆசை காட்டி நகை, பணம் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மாப்பிள்ளை பார்ப்பதாக கூறி நூதனமாக பணம் பறிக்கும் கும்பல்- வீடியோ

    சென்னை: "என் பொண்ணுகூட அந்த ரூமில் கொஞ்ச நேரம் தனியா பேசிட்டு வாங்களேன்" என்று ஆண்களிடம் சொல்லி சொல்லியே அவர்களிடம் பணத்தை மிரட்டி கறந்துள்ளார் அந்த பெண்ணின் தாய்.

    வடபழனியை சேர்ந்த இளைஞர் காளிசரண். வயசு 43 ஆகிவிட்டதால் கல்யாணம் செய்ய யாரும் பெண் தரவில்லை. அதனால் மேட்ரிமோனியல் உள்ளிட்ட திருமண பதிவு மையங்களில் தனக்கு ஒரு பெண் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

    வசந்த பிரியாவை பைக்கில் அழைத்து சென்றவர் யார்.. நடு ரோட்டில் நடந்த ஆசிரியை கொலையில் மர்மம் வசந்த பிரியாவை பைக்கில் அழைத்து சென்றவர் யார்.. நடு ரோட்டில் நடந்த ஆசிரியை கொலையில் மர்மம்

    உங்கள பிடிச்சு போச்சு

    உங்கள பிடிச்சு போச்சு

    அதன்படி கடந்த வாரம் காளிசரணுக்கு ஒரு பெண் போன் செய்து, "உங்கள் விவரங்களையெல்லாம் மேட்ரிமோனியலில் பார்த்தேன். உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. என் போட்டோவை உங்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிறேன். உங்களை நேரில் பார்க்க வேண்டும்போல் இருக்கு. வரமுடியுமா?" கேட்டு பூந்தமல்லி சாலையில் உள்ள சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் முகவரியையும் அனுப்பி அழைத்தார்.

    சொக்கி போனார்

    சொக்கி போனார்

    ஏற்கனவே 43 வயசு ஆகிவிட்ட காளிசரணுக்கு, வாட்ஸ்அப்பில் வந்த பெண்ணின் போட்டோவை பார்த்ததும் சொக்கியே போய்விட்டார். இவ்வளவு அழகு பெண்ணா? நமக்கா? என்று ஆச்சரியப்பட்டு கொண்டே அந்த பெண்ணை பார்க்க சொன்ன முகவரிக்கு கிளம்பினார். பெண்ணுக்கு நம்மை பார்த்தவுடன் பிடித்து போய்விட வேண்டும் என்று புது டிரஸ், தங்க மோதிரம், செயின் என கிட்டத்தட்ட ஒரு மாப்பிள்ளை ரேஞ்சுக்கு போனார். அங்கே வாட்ஸ்அப்பில் பார்த்த பெண் காளிசரணை வரவேற்று உள்ளே கூட்டிக் கொண்டு போனார்.

    டீ கொடுத்தார்கள்

    டீ கொடுத்தார்கள்

    அங்கே ஒரு பெண் உட்பட 3 பேர் இருந்தார்கள். அவர்கள் காளிசரணை வரவேற்று டீ கொடுத்தார்கள். பிறகு அங்கிருந்த பெண், இவ என் பொண்ணு, அதோ அந்த அறையில் கொஞ்சம் நேரம் போய் தனியா மனசுவிட்டு பேசிட்டு வாங்களேன்" என்று சொல்ல... காளிசரணும் பொண்ணு அறைக்கு போக, உடனே பின்தொடர்ந்த 3 பேரும் காளிசரணை கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம், செல்போன், ஏடிஎம் கார்டு எல்லாத்தையும் பிடுங்கிகொண்டு அனுப்பினார்கள்.

    சாவித்ரிதான் காரணம்

    சாவித்ரிதான் காரணம்

    இதுகுறித்து காளிசரண் வடபழனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து, வாட்ஸ்அப்பில் வந்த பெண்ணின் போட்டோவையும் போலீசாருக்கு அளித்தார். இதையடுத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து தேடி வந்ததில் தற்போது அந்த கும்பல் சிக்கியுள்ளது. இவர்கள் எல்லோரும் கேரளாவை சேர்ந்தவர்களாம். சாவித்ரி என்னும் 52 வயது பெண்தான் இவ்வளவுத்துக்கும் காரணம் என தெரியவந்துள்ளது.

    திருமண ஆசை

    திருமண ஆசை

    இவரது மகன் சிவா, மகள் பிரியா ஆகியோருடன் கோடம்பாக்கத்தில் வாடகை வீட்டில் சாவித்திரி குடியேறியுள்ளார். அப்போது கோகுல கிருஷ்ணன் என்ற தரகர் அறிமுகமாகி உள்ளார். இவர்களது வேலையே, யாரெல்லாம் 40 வயசுக்கு மேல கல்யாணம் ஆகாமல் இருக்கிறதோ, யாரெல்லாம் 2-வது கல்யாணத்துக்கு ஆசைப்படுகிறார்களோ அவர்களை வளைத்து போடுவதுதான். அவர்களின் முகவரியை கண்டு பிடித்து வைத்து கொண்டு, திருமண ஆசை காட்ட வேண்டியது.

    தனியா பேசிறீங்களா?

    தனியா பேசிறீங்களா?

    அதற்காக பெற்ற மகளையே சாவித்திரி போனில் பேச வைத்து, போட்டோவையும் அனுப்பி... நேரில் வரவழைப்பது... பிறகு "என் பொண்ணு சினிமா நடிகை மாதிரி இருக்கா பாருங்க. அதோ அந்த ரூமில் அவளிடம் தனியா பேசிவிட்டு வாங்க. உங்களுக்கு முதல்ல பிடிச்சா போதும். அப்பறம் உங்க வீட்டு ஆளுங்கள வரவழைச்சி பேசி கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடுவோம் என்பார்களாம்.

    மிரட்டி நகை பறிப்பு

    மிரட்டி நகை பறிப்பு

    இதை நம்பி மாப்பிள்ளை ரூமுக்கு போவாராம், சிறிது நேரம் தனியாக பேசுவார்களாம்... பின்னாடியே சென்ற 3 பேரும் நகை, பணம் பறிப்பார்களாம். இப்படியே 30-க்கும் மேற்பட்ட மாப்பிள்ளைகள் உயிர்பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடியிருக்கிறார்கள். அதனால் யாருமே இதுவரை இவர்களை பற்றி எந்த தகவலும் அளிக்க முன்வரவில்லை.

    ஏமாந்த தாத்தா

    ஏமாந்த தாத்தா

    இப்படித்தான் ஒரு தாத்தாவும் 2-வது கல்யாணத்துக்கு ஆசைப்பட, தாத்தா பெண் தேடும் விவரம் சாவித்திரி கண்ணில் பட்டுவிட, உடனே பெண்ணை பார்க்க காரில் வந்த தாத்தாவையும் இப்படியே மிரட்டி கார், செல்போன், டேப் என எல்லாத்தையும் சுருட்டி கொண்டு ஓடியிருக்கிறது இந்த கும்பல். இப்போது 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளார்கள். தப்பி போனவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    English summary
    3 people arrested in Chennai in the case Matrimonial fraud
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X