சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2-வது மனைவி மீது சந்தேகம்.. துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய திமுக மாஜி எம்எல்ஏ.. 3 வருடம் ஜெயில்!

திருவாரூர் மாஜி எம்எல்ஏவுக்கு 3 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஸ்கட் தந்துவிட்டு, வீட்டுக்கு வந்த மனைவி ஹேமாவை சந்தேகப்பட்டு..துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய திமுக மாஜி எம்எல்ஏவுக்கு 3 வருட ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை 2 முறை திருவாரூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் அசோகன். 2006-ம் ஆண்டு இவர், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். முன்னாள் அதிமுகவின் பேச்சாளரும்கூட!

3 year jail sentence for dmk ex mla

இவர், தன்னுடைய 2வது மனைவி ஹேமாவுடன் சென்னை பட்டினம்பாக்கத்தில் 2015ஆம் ஆண்டு வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட சமயத்தில், அதாவது டிசம்பர் 6-ந்தேதி ஹேமா, கணவரின் உதவியாளரை அழைத்துக் கொண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பால், பிஸ்கட் வழங்க சென்றார்.

திரும்பவும் வீட்டுக்கு வர இரவு 11 மணி ஆகிவிட்டது. அதனால் அசோகன், ஹேமா மீது சந்தேகப்பட்டு தகராறு செய்தார். ஹேமாவையும் அவரது தாயாரையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு துப்பாக்கியால் சுட்டு மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன ஹேமா தன் அம்மாவை கூப்பிட்டுக் கொண்டு வெளியே வந்துவிட்டார்.

தமிழே தெரியாமல் தமிழ்நாட்டில் நீதிபதியா.. தமிழ் மொழியை இல்லாமல் ஆக்கும் வேலை இது.. சீமான் சாடல்தமிழே தெரியாமல் தமிழ்நாட்டில் நீதிபதியா.. தமிழ் மொழியை இல்லாமல் ஆக்கும் வேலை இது.. சீமான் சாடல்

பின்னர் இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீசில் ஹேமா, புகார் செய்தார். தன்னை இரண்டு முறை சுட்டு கொலை செய்ய பார்த்தார் என்று ஹேமா சொல்லவும், அசோகன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது.

அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஹேமாவை துப்பாக்கியால் சுட்டதை உறுதி செய்ததையடுத்து, அசோகனை கைது செய்தனர். இதையடுத்து, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும், இந்த வழக்கு விசாரணை சென்னை கலெக்டர் ஆபீசில் செயல்பட்டு வரும் எம்பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சாந்தி முன்னிலையில் நடந்து வந்தது.

இந்நிலையில், இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட அசோகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதேசமயம் வழக்கில் அசோகனின் கோரிக்கையை ஏற்று ஒரு மாதத்திற்கு தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

English summary
3 year prison for thiruvarur dmk ex mla ashokan by chennai special court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X