சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

30 நாட்கள் தான் கெடு... தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்

Google Oneindia Tamil News

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தாங்கள் செய்த செலவு கணக்கை முறையாக பராமரிக்குமாறு தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியிருந்தது.

மேலும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் செலவு கணக்கை சமர்பிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கூட்டணியால் பாஜக குறைவான இடங்களில் வெற்றி.. பொன்.ராதா கொடுத்த பேட்டி.. ராஜேந்திர பாலாஜி சொன்ன பதில் கூட்டணியால் பாஜக குறைவான இடங்களில் வெற்றி.. பொன்.ராதா கொடுத்த பேட்டி.. ராஜேந்திர பாலாஜி சொன்ன பதில்

தேர்தல் செலவு

தேர்தல் செலவு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அதில் வெற்றிபெற்றவர்களும் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு அடுத்தப்படியாக உள்ள பணி என்னவென்றால் செலவு கணக்கை சமர்பிக்க வேண்டியவை தான்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தேர்தல் அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் கணக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள்

3 ஆண்டுகள்

தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாத படி அறிவிப்பு வெளியிடப்படும் என எச்சரித்துள்ளது.

தோராயம்

தோராயம்

இதனிடையே தேர்தலில் பல லட்சம் ரூபாயை தண்ணீராக வாரி இறைத்த வேட்பாளர்கள், தாங்கள் செலவு செய்த முழுத்தொகையை பற்றி குறிப்பிடாமல் தோராய கணக்கை சமர்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
30 days is the deadline to file an election expense account
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X