சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாச்சு.. நடுவுல கொஞ்சம் மழையை காணோமே.. காலை வாரிவிடுகிறதா தென்மேற்கு பருவமழை?

Google Oneindia Tamil News

சென்னை: தென்மேற்கு பருவமழையால் நாட்டின் 30% மாவட்டங்களுக்கு போதுமான மழை கிடைக்கவில்லை என்கிறது புள்ளி விவரங்கள்.

தென்மேற்கு பருவமழையானது இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக 12 நாட்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. ஆனால் நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.

40-50 கி.மீ. வேகத்தில் சூறாவளி.. 24 மணி நேரத்தில் அடிச்சு ஊத்த போகுது மழை.. தமிழகமே ஹேப்பி 40-50 கி.மீ. வேகத்தில் சூறாவளி.. 24 மணி நேரத்தில் அடிச்சு ஊத்த போகுது மழை.. தமிழகமே ஹேப்பி

30% மாவட்டங்களில் குறைவு

30% மாவட்டங்களில் குறைவு

மொத்தம் உள்ள 683 மாவட்டங்களில் 201 மாவட்டங்கள் அதாவது 30% மாவட்டங்கள் சராசரிக்கும் குறைவான மழை அளவையே பெற்றிருக்கின்றன. நடபாண்டில் தென்மேற்கு பருவமழையானது ஜூன் 1-ந் தேதி பெய்ய தொடங்கியது. ஜூலை 8-ந் தேதிக்குள் தென்மேற்கு பருவமழையால் அனைத்து பகுதிகளுக்கும் மழை கிடைக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜூன் 26-ந் தேதியே இந்திய வானிலை மையம், நாட்டின் அனைத்து பகுதிகளுக்குமே மழை பொழிவு கிடைத்திருக்கிறது என தெரிவித்தது.

சராசரிக்கும் குறைவான மழை

சராசரிக்கும் குறைவான மழை

ஜூன் 1-ந் தேதி முதல் ஜூன் 12-ந் தேதி வரையிலான காலத்தில் 9 மாநிலங்கள்- யூனியன் பிரதேசங்களில் சராசரிக்கும் குறைவான மழைதான் பெய்திருக்கிறது. கேரளாவைப் பொறுத்தவரை சராசரியைவிட 22% குறைவாகும். டெல்லி, மணிப்பூர், மிசோரம், டையூ டாமனில் இது சரசாரியைவிட 50%க்கும் குறைவாகும்.

டெல்லி மழை நிலவரம்

டெல்லி மழை நிலவரம்

தென்மேற்கு பருவமழை காலத்தில் டெல்லியில் ஜூலை 2-ல் 65.8 மி.மீ பெய்திருக்க வேண்டும். ஆனால் நடப்பாண்டில் 30.5 மி.மீ. மழைதான் பெய்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமைய்ன்று பல்வேறு மாநிலங்களில் சராசரியைவிட 13% கூடுதலாக மழை பெய்தது. பீகாரில் சரசாரியைவிட 66% பெய்திருக்கிறது. கடந்த ஆண்டு பீகார் வெள்ளத்தில் மிதந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அஸ்ஸாமில் வெள்ளம்

அஸ்ஸாமில் வெள்ளம்

அதேநேரத்தில் அஸ்ஸாம், மேகாலயாவில் 24% மற்றும் 28% மழை பொழிவு இருந்தது. இதனால் அஸ்ஸாமில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அஸ்ஸாமில் வெள்ளத்தால் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 34 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டும் இதே காலகட்டத்தில் அஸ்ஸாம் வெள்ளப் பெருக்கை எதிர்கொண்டது.

கூடுதல் மழை பெய்த மாநிலங்கள்

கூடுதல் மழை பெய்த மாநிலங்கள்

சிக்கிம் மாநிலத்தில் சராசரியைக் காட்டிலும் 2 மடங்கு மழை கூடுதலாக பெய்திருக்கிறது. வழக்கமாக 457.5 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இம்முறை 107% அதாவது 945.5 மி.மீ மழை கொட்டி தீர்த்திருக்கிறது. மேகாலயா, உ.பி,, ம,பி, சத்தீஸ்கர், அந்தமான், ஆந்திரா, தெலுங்கானாவிலும் சராசரியை விட கூடுதல் மழை கொட்டியிருக்கிறது.

English summary
According to Data, 30% of India's Districts Have Received Deficient Rainfall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X