சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னைக்கு புதிய போலீஸ் கமிஷ்னர்.. ஏகே விஸ்வநாதன் உள்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆப்ரேசன் பிரிவு ஏ.டி.ஜி.பி ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையராக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா மதுரை காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு முக்கிய உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உள்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

கடும் நெருக்கடி.. ஆக்ஷன்... சாத்தான்குளத்துக்கு புது டிஎஸ்பி.. கூண்டோடு உயர் அதிகாரிகள் இடமாற்றம்கடும் நெருக்கடி.. ஆக்ஷன்... சாத்தான்குளத்துக்கு புது டிஎஸ்பி.. கூண்டோடு உயர் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை காவல் ஆணையர்

சென்னை காவல் ஆணையர்

1 சென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் செயலாக்கம் ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2 செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல் ஆணையராக இடமாற்றம்.
3. சீருடைப்பணியாளர் தேர்வாணைய டிஜிபி சுனில்குமார் மாநில மனித உரிமை ஆணைய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. மதுரை காவல் ஆணையராக பதவி வகிக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஏடிஜிபி தொழில் நுட்பப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
5. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி சிறப்பு காவற்படை ஈரோடு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
6. தலைமையிட ஐஜி ஜெயராம் மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் சென்னை தலைமையிட ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. சென்னை ஐஜி கணேசமூர்த்தி பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் -சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
10. சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா மதுரை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் .(ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்து ஐஜி அந்தஸ்துக்கு
குறைப்பு)

திருப்பூர் காவல் ஆணையர்

திருப்பூர் காவல் ஆணையர்

11. சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் -சென்னை சட்டம் ஒழுக்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
12. திருப்பூர் காவல் ஆணையர் சஞ்சய்குமார் சென்னை தொழில் நுட்பப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
13. தஞ்சை டிஐஜிபியாக பதவி வகிக்கும் லோகநாதன் ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
14. சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமர் சி சரத்கர் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சிபிசிஐடி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
15. உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜி கண்ணன் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
16. விழுப்புரம் டிஐஜியாக பதவி வகிக்கும் சந்தோஷ்குமார் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை காவல் ஆணையரக நிர்வாக ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
17.காஞ்சிபுரம் டிஐஜி தேன்மொழி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
18. கோவை டிஐஜி கார்த்திகேயன் ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருப்பூர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
19. திண்டுக்கல் டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
20. கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி புவனேஷ்வரி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை ஐஜி (பொது) நியமிக்கப்பட்டுள்ளார்.

 சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர்

சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர்

21. திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் மாற்றப்பட்டு சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
22. சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
23. சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையர் ஏ.ஜி.பாபு சென்னை தெற்குமண்டல இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
24. சென்னை தெற்குமண்டல இணை ஆணையராக உள்ள மகேஷ்வரி சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
25. சென்னை போக்குவரத்து தெற்கு மண்டல இணை ஆணையர் எழிலரசன் விழுப்புரம் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
26. சென்னை ஆயுதப்படை டிஐஜி செந்தில்குமாரி சென்னை தலைமையிட டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
27. மதுரை டிஐஜி ஆன்னி விஜயா திருச்சி டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்..
28. சென்னை டிஐஜி (நிர்வாகம்) நரேந்திரன் நாயர் கோவை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
29. ராமநாதபுரம் டிஐஜி ரூபேஷ்குமார் மீனா தஞ்சை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
30. அயல்பணியில் இருக்கும் அபிஷேக் திக்‌ஷித் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று டிஐஜியாக தொடர்கிறார்.

விழுப்புரம் எஸ்பி

விழுப்புரம் எஸ்பி

31. சிபிசிஐடி குற்றப்பிரிவு-2 எஸ்பியாக இருக்கும் மல்லிகா டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி குற்றப்பிரிவில் தொடர்கிறார்.
32. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சாமூண்டீஸ்வரி டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு காஞ்சிபுரம் சரக டிஐஜியாக தொடர்கிறார்.
33. சமுதாய நுண்ணறிவு பிரிவு எஸ்பியாக இருக்கும் லட்சுமி சென்னை (தெற்கு)போக்குவரத்து பிரிவு இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
34. சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்பியாக இருக்கும் ராஜேஷ்வரி டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை ஆயுதப்படை டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
35. சீருடைப்பணியாளர் தேர்வாணைய எஸ்பி பாண்டியன் டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை ரயில்வே டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்,
36. பூக்கடை துணை ஆணையர் ராஜேந்திரன் டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு மதுரை சரக டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
37. அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு திண்டுக்கல் டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
38. சென்னை போக்குவரத்து (தெற்கு) துணை ஆணையர் மயில்வாகனன் டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு ராமநாதபுரம் டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
39. சென்னை செக்யூரிட்டி பிரிவு துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் விழுப்புரம் எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Major reshuffle of IPS officers in TamilNadu . 39 officers, including Chennai Police Commissioner A K Viswanathan, transferred. Mahesh Kumar Aggarwal is the new Commissioner of Police for Chennai city
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X