சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரெடியாகிறது பஸ்கள்.. தமிழகத்தில் எப்போது ஓட தொடங்கும்.. வெளிமாநிலம் செல்வோர் என்ன செய்யலாம்..?

தமிழகத்தில் பஸ்கள் எப்போது ஓட தொடங்கும் என்ற ஆலோசனை நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பஸ்கள் எப்போது ஓட தொடங்கும், அப்படி இயக்கும்பட்சத்தில் வெளிமாநிலத்திற்கு செல்வோர் என்னசெய்ய வேண்டும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்போது 3வது லாக்டவுன் இறுதிக்கட்டத்தில் உள்ளது.. 4வது லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.. அந்த லாக்டவுன் புதுவிதிமுறைகளுடன் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.. அப்படியானால் ஊரடங்கில் பொது போக்குவரத்துக்கு வழி வகை செய்யப்படும் என்றே எதிபார்க்கப்படுகிறது

4.0 lockdown: how to start transport in in tamilnadu after may 17

பொதுபோக்குவரத்து என்றால் இதில் பஸ்களும் அடக்கம்தான்.. எனினும் முன்பு போல இயல்பாக பஸ்களை இயக்க முடியாது.. நிச்சயம் சில ரூல்ஸ்களை வைத்துதான் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

எனவே விரைவில் மாவட்ட அளவில் பஸ்களை இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்... இதை பற்றி போக்குவரத்து அதிகாரிகள் சொல்லும்போது, "தமிழகத்தில் சில மாவட்டங்கள் தொற்று இல்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.. அநேகமாக இந்த மாவட்டங்களுக்கு பஸ்களை இயக்கலாமா என ஆலோசித்து வருகிறோம்.

மேலும் குறைந்த அளவிலான போக்குவரத்து சேவையை தொடங்குவது குறித்தே ஆலோசனை செய்கிறோம்.. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும். தொற்று இல்லாத மாவட்டங்களுக்கே குறைந்த அளவு பஸ்கள் என்றால், தொற்று இருக்கும் மாவட்டங்களக்கு அதைவிட குறைவான, பேருந்துகளை அதிக கட்டுப்பாடுகளுடன் இயக்கலாமா என்றும் திட்டமிட்டு வருகிறோம்... கண்டிப்பாக சென்னை போன்ற நகரங்களுக்கு பஸ்களை இயக்க முடியாது..

ரயிலில் வந்த பயணிகளை காணவில்லை.. ஏறும் போது இருந்தவர்கள்.. இறங்கு போது மாயம்.. நீடிக்கும் மர்மம் ரயிலில் வந்த பயணிகளை காணவில்லை.. ஏறும் போது இருந்தவர்கள்.. இறங்கு போது மாயம்.. நீடிக்கும் மர்மம்

அதேபோல கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநில தொழிலாளர்கள் பயணம் மேற்கொள்ள 044-24794709 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசினால், அவர்கள் செல்ல வேண்டிய மாநிலத்துக்கு ஏற்ப திட்டமிட்டு பஸ்கள் செல்லும் நேரம் அவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்படும். வெளி மாநிலம் செல்ல வேண்டும் என்றால், மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே முழு ஆலோசனை முடிந்து இறுதி தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

English summary
4.0 lockdown: how to start transport in in tamilnadu after may 17
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X