சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 4244 பேர் பாதிப்பு.. சென்னையில் ஆச்சர்ய மாற்றம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 4244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,34,226லிருந்து 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை தலைநகரான சென்னையில் குறைந்து வருகிறது. தென்மாவட்டங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் பாதிப்பு 100ஐ தாண்டி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில்,' 4244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,34,226லிருந்து 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.

அமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா..பரபரப்பு!அமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா..பரபரப்பு!

ஆக்டிவ் நோயாளிகள்

ஆக்டிவ் நோயாளிகள்

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 3,617 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 85,915 லிருந்து 89,532 ஆக அதிகரித்துளளது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 46,969 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் அதாவது 3ல் ஒரு பங்கினர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குறைந்து வரும் கொரோனா

குறைந்து வரும் கொரோனா

சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் சென்னையில் நாளுக்கு நாள் தொற்று குறைந்து வருகிறது. சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 76,148 லிருந்து 77,338 ஆக அதிகரித்துள்ளது.

மதுரையிலும் அதிகம்

மதுரையிலும் அதிகம்

சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் அதேநேரம் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக இன்று காஞ்சிபுரத்தில் 385 பேருக்கும், மதுரையில் 319 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் 246 பேருக்கும், திருவள்ளூரில் 232 பேருக்கும். செங்கல்பட்டில் 245 பேருக்கும் இன்று ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனியில் மோசம்

தேனியில் மோசம்

இதை தவிர பல மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அங்கு இன்று ஒரே நாளில் 115 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. இதேபோல் வேலூரில் 151 பேருக்கும், தூத்துக்குடியில் 136 பேருக்கும், திருநெல்வேலியில் 131 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் 103 பேருக்கும், திருவண்ணாமலையில் 151 பேருக்கும், கன்னியாகுமரியில் 104 பேருக்கும், கோவையில் 117 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரிசோதனை அதிகம்

பரிசோதனை அதிகம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 1966 ஆக அதிகரித்துள்ளத. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 42531 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 16,09,448 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 41,325 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 15,42,234 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

English summary
4,244 Coronavirus positive cases in Tamil nadu today , tottlay cases rised to 1,38,470
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X