Just In
தமிழகத்தில் ஒரே நாளில் 4,295 கொரோனா கேஸ்கள்
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4,295 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று 1,132 பேருக்கு கொரோனா பதிவாகியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் புதிதாக 4,295 பேருக்கு கொரோனா பதிவாகியுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு 6,83,486 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில், மொத்த கொரோனா நோயாளி உயிரிழப்பு எண்ணிக்கை 10,586 என்ற அளவில் உள்ளது.
சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் மகன் அன்பழகன் கொரோனாவால் உயிரிழப்பு- ஸ்டாலின் இரங்கல்
சென்னையில் மேலும் 1,132 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவான நிலையில், சென்னையில் 1,458 பேர் இன்று குணமடைந்தனர்.