சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் சூப்பர் மாற்றம்.. ஒரே நாளில் 4,545 குணம் அடைந்து சாதனை.. குறைந்தது ஆக்டிவ் கேஸ்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 4,545 கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதால் விரைவில் பாதிப்பு இருந்து மீளும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு பொதுமுடக்கம் காரணமாக வேகமாக குறைந்தது. முதலில் உச்சம் தொட்ட போதிலும் தற்போது குறைந்து வருகிறது. ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் சென்னையில் சரசரவென சரிந்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 4,545 கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 71,116 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போதைய நிலையில் 45,839 பேர் கொரோனா பாதிப்புடன் (ஆக்டிவ் கேஸ்) சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு தொற்று.. சென்னையில் நல்ல மாற்றம்.. சரசரவென குறையும் கொரோனா!தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு தொற்று.. சென்னையில் நல்ல மாற்றம்.. சரசரவென குறையும் கொரோனா!

சென்னையில் அதிகம்

சென்னையில் அதிகம்

சென்னையில் தான் அதிகபட்சமாக 22,374 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 3,486 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். செங்கல்பட்டில் 2851 பேர் திருவள்ளூரில் 1744 பேரும், திருவண்ணாமலையில் 1311 பேரும், வேலூரில் 1320 பேரும், சேலத்தில் 869 பேரும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ராமநாதபுரத்தில் அதிகம்

ராமநாதபுரத்தில் அதிகம்

காஞ்சிபுரத்தில் 1,663 பேரும், ராமநாதபுரத்தில் 953 பேரும், தேனியில் 793 பேரும், கோவையில் 548 பேரும், கடலூரில் 410 பேரும், தூத்துககுடியில் 535 பேரும், திருநெல்வேலியில் 591 பேரும், திருச்சியில் 435 பேரும், விருதுநகரில் 670 பேரும், விழுப்புரத்தில் 487 பேரும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருப்பூரில் குறைவு

திருப்பூரில் குறைவு

தமிழகத்திலேயே மிக குறைந்த அளவாக பெரம்பலூரில் 14 பேரும், அரியலூரில் 23 பேரும், கரூரில் 45 பேரும், நாமக்கல்லில் 26 பேரும், தருமபுரியில் 54 பேரும், திருப்பூரில் 96 பேரும், கிருஷ்ணகிரியில் 118 பேரும், தஞ்சாவூரில் 172 பேரும், திருப்பத்தூரில் 184 பேரும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எங்கு குறைந்து வருகிறது

எங்கு குறைந்து வருகிறது

அண்மைக்காலத்தில் கொரோனா பாதிப்பு, மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரியில் அதிகமாக உள்ளது.இதேபோல் வேலூர், கோவை, ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரத்தில் அதிகமாக உள்ளது. இதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டிலும் அதிகமாக உள்ள போதிலும், இங்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.

English summary
4,545 COVID-19 positive patients discharged following treatment today. till now 71,116 COVID-19 positive patients discharged
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X