சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல்... தயாராகிறது திமுக.. பொறுப்பாளர்களை அறிவித்தது

Google Oneindia Tamil News

Recommended Video

    TN By Elections 2019: 4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக- வீடியோ

    சென்னை: 2019, மே 19 அன்று நடைபெற உள்ள 4 சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் பொறுப்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.

    திமுக சார்பில், சூலூரில் பொங்கலூர் பழனிச்சாமி, அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் பி.சரவணன், ஓட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையா போட்டியிடுகின்றனர் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    4 Assembly constituency by- election, DMK Authorities announcement

    4 தொகுதிகளுக்கு வருகிற 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஏப்ரல் 29ம் தேதி ஆகும். 30ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்றும், மே 2ம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    இதனைத் தொடர்ந்து மே 19ம் தேதி வாக்குப்பதிவும், லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன், 23ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். அதிமுக சார்பில் 4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்கு சதவீத உயர்வு ஆளுங்கட்சிக்கு ஆபத்தா.. 18 ஆர்.கே.நகர்கள் கண் முன் வந்து போகுதே.. ! வாக்கு சதவீத உயர்வு ஆளுங்கட்சிக்கு ஆபத்தா.. 18 ஆர்.கே.நகர்கள் கண் முன் வந்து போகுதே.. !

    இந்தநிலையில், 4 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் நியமனம் செய்து, தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, வருகிற மே 19 அன்று நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் ஒட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திமுக தலைமைக் கழகத்துடன் தொடர்பு கொண்டு ஆவன செய்திடவும், தொகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகளை திமுக சார்பில், கவனித்திட பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, அரவக்குறிச்சி அடுத்த சேந்தமங்கலம் ஆர்.எல்லப்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

    English summary
    by elections 2019: DMK Authorities announcement For 4 Assembly constituency
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X