சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிளஸ் 2 தேர்வில் அசத்திய சென்னை மாநகராட்சி பள்ளிகள்.. 4 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகராட்சியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 4 அரசு பள்ளிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ரூ.1லட்சம் பரிசு வழங்கி பாராட்டினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 8.87 லட்சம் பேர், 12ம் வகுப்பு தேர்வெழுதினர். இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியது. இதில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்று இருந்தனர்.

4 chennai corporation schools100 percent pass in plus 2 exam

முதல் இடத்தில் இருந்த விருதுநகருக்கு என்ன ஆச்சு.. 7வது இடத்துக்கு போச்சுமுதல் இடத்தில் இருந்த விருதுநகருக்கு என்ன ஆச்சு.. 7வது இடத்துக்கு போச்சு

இந்நிலையில் சென்னையில் உள்ள கோயம்பேடு, நெசப்பாக்கம், நுங்கம்பாக்கம், சுப்ராயன் தெரு ஆகிய நான்கு பள்ளிகள் பிளஸ்2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இந்த நான்கு பள்ளிகளையும் பாராட்டியதோடு, தலா ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கினார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 1.62 சதவீதம் அதிகரித்து. 93.73 சதவீதமாக தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.

English summary
4 corporation schools100 percent pass in plus 2 exam in chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X