சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தல்... வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    TN By Election:4 தொகுதி இடைத்தேர்தல்.. வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

    தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து திமுக சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

    பாப்பிரெட்டிபட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு.. தேர்தல் அதிகாரி அதிரடி பரிந்துரை!பாப்பிரெட்டிபட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு.. தேர்தல் அதிகாரி அதிரடி பரிந்துரை!

    அதிமுக வேட்பாளர்கள்

    அதிமுக வேட்பாளர்கள்

    நேற்று அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அதின் ஒருங்கிணைப்பாளர்கள் ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் அறிவித்தனர். இதன்படி நேற்றே விருப்ப மனு தாக்கல் மற்றும் நேர்காணல் நடந்தது. இன்று அல்லது நாளை அதிமுக வேட்பாளர்கள் யார் என்பதை அதிமுக தலைமை அறிவிக்கலாம்.

    மநீம வேட்பாளர்கள்

    மநீம வேட்பாளர்கள்

    இதேபோல் டிடிவி தினகரனின் அமமுக சார்பில் போட்டியிட உள்ளவர்களின் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கமலின் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளார்கள்.

    வேட்பு மனு தாக்கல்

    வேட்பு மனு தாக்கல்

    இந்நிலையில் அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வருகிற 29ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

    வேட்பு மனு வாபஸ்

    வேட்பு மனு வாபஸ்

    ஏப்ரல் 30ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை தொடங்கி மே 2ம் தேதி வரை நடக்கிறது. மே 2ம் தேதி மாலையே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் சுயேட்சைகளின் சின்னம் ஆகியவை அறிவிக்கப்பட உள்ளது. இதேபோல் மே 2ம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம்.

    மத்தியில் யார் ஆட்சி

    மத்தியில் யார் ஆட்சி

    மே 19ம் தேதி 4 தொகுதிகளில் தேர்தல் முடிந்த உடன் மே 23ம் தேதி வாக்குள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் 22 தொகுதிகளுக்கும், மே 23ம் தேதி முடிவு தெரிந்துவிடும். அதேபோல் மத்தியில் அடுத்து யார் ஆட்சி என்பதும் மே 23ம் தேதி முடிவுகள் வெளியாவதால் தெரிந்துவிடும்.

    English summary
    Tamilnadu elections 2019 : 4 constituency by-election: Nominations Start Today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X