சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2030 ம் ஆண்டு 4 லில் 1 பங்கு குழந்தைகள் படிக்காதவர்களாக இருப்பார்கள்... ஐ.நா அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: 2030 ம் ஆண்டு 4 லில் ஒரு பங்கு குழந்தைகள் படிக்காதவர்களாக இருப்பார்கள் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

உலகின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் அடிப்படையில் புதிய கணக்கெடுப்புகள் வெளியாகியுள்ளன. இந்த கணக்கெடுப்பின்படி எஸ்.டி.ஜி., எனப்படும் உலகின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் காலக்கெடு 2030 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தானில் உள்ள குழந்தைகள் 25% பேர் ஆரம்பக் கல்வியை கூட முடிக்கதவர்களாக இருப்பார்கள் என்று தெரிகிறது.

 4 in 1 children will be uneducated By 2030

அனைவருக்கும் 12 ஆண்டு கல்வி என்ற இலக்கை நோக்கிய திட்டத்தில் பாகிஸ்தான் பாதி இலக்கை மட்டுமே அடைய முடியும் என்று யுனெஸ்கோவின் புதிய கணிப்புகள் கூறுகிறது. அதோடு இப்போது உள்ள இளைஞர்களில் சரி பாதி சதவிகிதத்தினர் உயர்நிலைக் கல்வியை இன்னமும் முடிக்காமல் உள்ளனர்.

இலக்கு ஆண்டான 2030 க்குள் 6 வயதில் இருந்து 17 வயதிற்குள் இருப்பவர்கள் கல்வி கற்பதில் இருந்து வெளியேறுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், 40 சதவீதம் பேர் தற்போதைய விகிதத்தில், இடைநிலைக் கல்வியை முடிக்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் நிலை குறித்து பேசிய யுனெஸ்கோ புள்ளி விவர நிறுவன இயக்குனர் சில்வியா மோன்டோயா, சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் கடமைகளை எதிர்கொள்ள வேண்டும். எங்களால் அவற்றைக் கண்காணிக்க முடியாவிட்டால் இலக்குகள் இருந்து என்ன பயன்? காலக்கெடுவை நாம் நெருங்குவதற்கு முன்பு இந்த தரவு இடைவெளியை சரிசெய்ய சிறந்த நிதி மற்றும் ஒருங்கிணைப்பு தேவை என கூறியுள்ளார்.

English summary
UNESCO reports that 4 in 1 children will be uneducated By 2030
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X