சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சரியான நேரம்.. ப.சி காவலில் சென்ற 10 நாளில் பல்வேறு திருப்பம்.. அடுத்தடுத்து அதிரடி காட்டிய நிர்மலா

Google Oneindia Tamil News

Recommended Video

    இனி 12 பொதுத்துறை வங்கிதான்: நிர்மலா சீதாராமன் அதிரடி | Nirmala Sitharaman Pressmeet

    சென்னை: சிபிஐ காவலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சென்ற பின் வெறும் இரண்டு வாரத்தில் இந்திய பொருளாதாரத்தில் அதிரடி மாற்றங்கள், அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கைது செய்ய அமலாக்கத்துறையும் தீவிரமாக முயன்று வருகிறது. இவர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இவர் சிறையில் இருக்கும் அதே நேரத்தில் இந்தியாவின் பொருளாதாரம் ஒரு பக்கம் மிக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இன்னும் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    குளிக்க போன ஐஸ்வர்யா.. தாலி கட்ட கொஞ்ச நேரம்தான்.. அப்படியே மாயமானதால் அதிர்ச்சி!குளிக்க போன ஐஸ்வர்யா.. தாலி கட்ட கொஞ்ச நேரம்தான்.. அப்படியே மாயமானதால் அதிர்ச்சி!

    காவல்

    காவல்

    ப. சிதம்பரம் சிபிஐ காவலில் சென்ற பின்தான் ஆர்பிஐ அமைப்பு 1.76 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அளிக்க ஒப்புக்கொண்டது. இதை அதிகம் எதிர்த்தது ப. சிதம்பரம்தான். இதனால் பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும் என்று அவர் கூறினார். ஆனால் ப. சிதம்பரம் காவலில் இருக்கும் போதுதான் அந்த பணம் அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமன்

    அதேபோல் ப. சிதம்பரம் காவலில் இருக்கும் போதுதான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார சீர்திருத்தங்களை செய்தார். நிறைய துறைகளில் வரி குறைப்பு நடவடிக்கைகளை செய்தார். இதில் சில ஐடியா ப.சிதம்பரம் கொடுத்தது. ப. சிதம்பரம் கடந்த மாதங்களில் அருண் ஜேட்லி மீது வைத்த விமர்சனங்களை பின்பற்றி நிறைய வரிக்குறைப்பு நடவடிக்கையை நிர்மலா சீதாராமன் செய்துள்ளார்.

    ஜிடிபி

    ஜிடிபி

    அதே மாதிரி ப. சிதம்பரம் காவலில் இருக்கும் போதுதான் இந்தியாவின் புதிய ஜிடிபி அறிவிக்கப்பட்டது. கடந்த காலாண்டு ஜிடிபி 5%ஆக குறைந்தது. இவ்வளவு மோசமான சதவிகிதத்தை இந்தியா பல வருடங்கள் கழித்து எட்டியுள்ளது. ப. சிதம்பரம் இந்த நேரத்தில் வெளியே இருந்திருந்தால் இதை கடுமையாக விமர்சனம் செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மிக முக்கியம்

    மிக முக்கியம்

    அதெல்லாம் போக மிக மிக முக்கியமாக ப. சிதம்பரம் காவலில் இருக்கும் போதுதான் இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இணைப்பை பல நாட்களாக கடுமையாக விமர்சித்து வந்தவர்தான் ப. சிதம்பரம். அவர் இல்லாத நேரத்தில் மிக முக்கியமான வங்கிகள் இணைக்கப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

    English summary
    4 major things happened in the finance sector in a week after P Chidambaram arrest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X