சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கஞ்சா ராணி சசிகலா.. விரட்டி பிடித்து ஆட்டோவை மடக்கிய போலீஸ்.. 46 கிலோ கஞ்சா பறிமுதல்!

3 பெண்களிடம் இருந்து 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

Google Oneindia Tamil News

சென்னை: எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோயம்பேடு பஸ் ஸ்டாண் வரை போலீசாரின் சேசிங் காட்சியை கண்டு பொதுமக்கள் பரபரப்பாயினர். கிலோ கணக்கில் கஞ்சாவை ஆட்டோவில் ஏற்றி கொண்டு போயிருந்த சசிகலா என்ற கஞ்சா ராணி உள்பட 4 பேரை போலீசார் விரட்டி சென்று கைது செய்துவிட்டனர்.

எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த ரயிலில் 3 பெண்கள் இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

4 people including 3 women arrested in Kanja Smuggling in Chennai

மேலும், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து தேனிக்கு பஸ் மூலம் கஞ்சா கடத்த போவதாகவும் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனால் அந்த பெண்களை போலீசார் கண்காணித்தனர். அவர்கள் ஒரு ஆட்டோவில் ஏறி கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பின் தொடர்ந்து விரட்டிசென்று பிடித்தனர்.

4 people including 3 women arrested in Kanja Smuggling in Chennai

அவர்களது பையை சோதித்ததில், மொத்தம் 46 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். இதில் முக்கியமானவர் சசிகலா என்பதும், அவருக்கு உடந்தையாக, பாத்திமா, கணேசன், பாண்டீஸ்வரி ஆகியோர்தான் என்பதும் தெரியவந்துள்ளது. இதில், பாத்திமாரை தவிர மற்ற அனைவருமே தேனியை சேர்ந்தவர்களாம்.

ராஜினாமா கடிதம் அளித்த தலைமை நீதிபதி தஹீல் ரமாணியுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்புராஜினாமா கடிதம் அளித்த தலைமை நீதிபதி தஹீல் ரமாணியுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு

வழக்கமாக ஆந்திராவில் இருந்து ரயில் மூலம்தான் கஞ்சா கடத்தி வரப்படும் என்றும், அதனை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து தேனிக்கு கொண்டு சென்று விற்பதாகவும் இவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களிடம் தொடர் விசாரணை நடக்கிறது.

English summary
4 people including 3 women arrested in Kanja Smuggling case in Chennai and 46 kg Kanja seized from them
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X