சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாறி மாறி குழப்பம்.. மீண்டும் அதிமுக - பாஜகவுடன் தேமுதிக பேச்சு!

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 சீட்டுகள் ஒதுக்கீடு என தகவல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக கூட்டணியில் தேமுதிக - ஓ.பி.எஸ். தகவல்

    சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு இடம் இருக்கா இல்லையா என்பது தொடர்ந்து குழப்பமாக உள்ளது. பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் இன்று மாலை மீண்டும் பாஜக, அதிமுகவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது தேமுதிக.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று 3-வது முறையாக தமிழகம் வந்த நிலையில் கூட்டணியில் கூட்டணியை உறுதி செய்யும் முனைப்பில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதையடுத்து அதிமுக தரப்பு, தேமுதிக தரப்பு என தனித்தனியாக அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

    4 Seats for DMDK in ADMk Alliance

    இன்று மோடி வருவதால் எப்படியும் விஜயகாந்த்தை சமாதானப்படுத்தி மேடைக்கு கூட்டி கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடைசி வரை அது நடக்காமல் போய் விட்டது.

    வேலூர் கிடைத்தும்.. துரைமுருகனுக்கு மகிழ்ச்சி இல்லையாமே!வேலூர் கிடைத்தும்.. துரைமுருகனுக்கு மகிழ்ச்சி இல்லையாமே!

    காலை நிலவரப்படி தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பியூஷ் கோயலுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதேசமயம், தேமுதிக குழு ஒன்று துரைமுருகனைப் பார்த்து மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக ஆவசமடைந்தது. மோடி கூட்ட மேடையில் வைக்கப்பட்ட விஜயகாந்த் படம் தூக்கப்பட்டது.

    இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சுதீஷ் தொடர்ந்து பேச்சு நடத்துவோம். அதேசமயம், துரைமுருகனுடன் பேசியது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார். இந்த பின்னணியில் தற்போது மீண்டும் இந்த மூன்று கட்சிகளிடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

    English summary
    ADMK has alloted 4 Seats for DMDK in MP Election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X