சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தோனேஷியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்கள்.. திமுக தலைவர் ஸ்டாலினிடம் உதவி கேட்பு

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பிரச்னையால் நாடு திரும்ப முடியாமல் இந்தோனேஷியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தோனேஷியா தமிழ் சங்கத்தின்ர் திமுக தலைவர் ஸ்டாலிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது: தற்சமயம் இந்தோனேஷியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாக பரவிக் கொண்டுள்ளது.

 430 Tamil families stranded in Indonesia, who wish to return to Tamil Nadu.: says mk stalin

இன்று தமிழ் மக்கள் ஏறக்குறைய 400 குடும்பங்கள் தலைநகர் ஜகார்த்தாவிலும், ஏறக்குறைய 30 தமிழ் குடும்பங்கள் பாண்டுங் நகரத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் அனைத்து தமிழ் மக்களும் கொரோனா பாதிப்பல் இருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு நம் தாயகம் தமிழ்நாட்டிற்கு திரும்ப வர விரும்புகிறார்கள்.

ஆனால் தற்சமயம் விமானப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் தமிழ் குடும்பங்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பி வரமுடியாமல் தவிக்கிறார்கள். ஆகவே தாங்கள் தயைகூர்ந்து மாண்புமிகு முதமைச்சர் அவர்களிடமும் மற்றும் மாண்பிமிகு பிரதமர் அவர்களிடமும் பரிந்துரைத்து இங்கே உள்ள தமிழ் குடும்பங்கள் நாடு திரும்ப விமான போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended Video

    கொரோனா: தனிமைபடுத்த மரத்தில் குடில்... விழிப்புணர்வை முறையாக பின்பற்றும் கிராமம்

    இந்த கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இந்தோனேசியாவில் 430 தமிழ் குடும்பங்கள் சிக்கித் தவிக்கின்றார்கள். அவர்கள் தமிழகத்திற்குத் திரும்ப விரும்புகிறார்கள். பிரதமர் மோடி, மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இந்த விஷயத்தில் தலையிட்டு இந்தோனேஷியாவில் உள்ள 430 தமிழ் குடும்பங்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    English summary
    dmk leader mk stalin request pm modi and cm edappdi palanisamy to help evacuate 430 Tamil families immediately from Indonesia
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X