சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கழுத்தில் சங்கிலி.. கொடுமைப்படுத்தப்பட்ட 45 நாய்கள்.. கொடூர மரணம்.. சென்னை ஐஐடிக்கு எதிராக புகார்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஐஐடியில் 45 நாய்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கு எதிராக இந்த புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வருடம் சென்னை ஐஐடியில் 45 நாய்கள் திடீரென மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்த 45 நாய்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.

8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது! 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!

மோசமான நிலையில் மெலிந்த தேகத்தோடு இந்த நாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே இந்த நாய்களின் மரணம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

புகார்

புகார்

இந்த நிலையில்தான் கேபி ஹரிஷ் என்ற பெங்களூரை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் போலீசில் புகார் அளித்துள்ளார். இவர் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நாய்களின் மரணத்திற்கு சென்னை ஐஐடி ரிஜிஸ்டர் ஜேன் பிரசாத் தான் காரணம் என்று கூறி சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கு எதிராக இந்த புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

அவர் தனது புகார் மனுவில், சென்னை ஐஐடியில் 45 நாய்கள் மரணம் அடைந்துள்ளன. இந்த ஐஐடி வளாகத்தில் டாக் பார்க் என்ற பகுதி உள்ளது. இது மோசமான நிலையில் இருந்துள்ளது. சென்னையில் இருந்த 186 தெரு நாய்களை முறையின்றி, விதியை மீறி இவர்கள் பிடித்துள்ளனர். அதை இந்த டாக் பார்க்கில் அடைத்து வைத்துள்ளனர்.

செயின்

செயின்

கழுத்தில் செயின் போட்டு, உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி உள்ளனர். 24 மணி நேரமும் செயினில், கூண்டுக்குள் அந்த நாய்கள் இருந்துள்ளன. நாய்களை பராமரிக்க ஆட்கள் இல்லை. இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அந்த நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பார்த்துக்கொள்ள ஆட்கள் இல்லாமல் அந்த நாய்கள் கடுமையாக கஷ்டப்பட்டுள்ளன.

மரணம்

மரணம்


இதில் 45 நாய்கள் பலியானது. மீதம் உள்ள 141 நாய்கள் மிக மோசமான உடல்நிலையில் இருக்கின்றன. இந்த நாய்களின் மரணம் குறித்து ஐஐடி ரிஜிஸ்டரும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நாய்களை விதிகளை மீறி சிறைபிடித்து கொடுமைப்படுத்திய காரணத்தால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாய்களின் மரணம் தொடர்பாக சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீட்க வேண்டும்

மீட்க வேண்டும்

உள்ளே இருக்கும் நாய்களை விடுவிக்காமல் இன்னும் அடைத்து வைத்துள்ளனர். உடனே இந்த நாய்களை விடுவிக்க வேண்டும். அந்த நாய்களுக்கு உரிய மருத்துவம் அளித்து பாதுகாக்க வேண்டும். சட்ட பிரிவு 428 மற்றும் 429 கீழ் இதில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் இவர்கள் மீது தொடுக்க வேண்டும்.

நடவடிக்கை

நடவடிக்கை


கடந்த செப்டம்பர் 17ம் தேதியே தெரு நாய்களை டாக் பார்க்கில் வைக்க கூடாது என்று சென்னைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஐஐடி நிர்வாகம் இதை பின்பற்றவில்லை. பல நாய்கள் இன்னும் உள்ளே இருக்கின்றன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

English summary
45 Dogs died in Chennai IIT Dog Park: Case filed against IIT M in commissioner officer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X