சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை மறுநாளைக்குள் 46 பள்ளிகள் மூடப்பட்டு நூலகங்களாக மாறுகிறது.. மாவட்ட வாரிய விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அரசின் அறிவிப்பின்படி முதல்கட்டமாக 46 பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றை நாளை மறுதினம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் பணியாற்ற நாள் ஒன்றுக்கு 315 ரூபாய் ஊதியத்தில் நூலகர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைந்த, குறிப்பாக ஒற்றை இலக்க எண்ணிக்கை மாணவர்களை கொண்ட பள்ளிகளை மூடிவிட்டு, அவற்றை நூலகங்களாக மாற்றவும், நூலகங்களில் ஆயிரம் புத்தகங்களை வைத்து முழுநேர நூலகங்களாக செயல்பட வைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

46 schools become a library will next days in tamilnadu

அதன்படி தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 46 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் 6 பள்ளிகளும், சிவகங்கை மாமவட்டத்தில் 4 பள்ளிகளும், விருதுநகர் , நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா 3 பள்ளிகளும், வேலூர் மாவட்டத்தில் 4 பள்ளிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பள்ளிகளும் நூலகங்களாக மாற்றப்படுகின்றன.

திண்டுக்கல், புதுக்கோட்டை, விழுப்புரம், கரூர், தர்மபுரி மாவட்டங்களில் தலா 2 பள்ளிகளும், திருவள்ளூர், தேனி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பள்ளியும் நூலகங்களாக மாற்றப்படுகின்றன.

மூடப்பட்ட பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்து நூலகங்கள் பள்ளி கட்டிடத்திற்கு மாற்றப்படுகின்றன. இதேபோல் நூலகம் இல்லாத பகுதி என்றால் பள்ளி கட்டிடங்களே நூலகங்களாக மாற்றப்படுகின்றன. முதல்கட்டமாக 500 புத்தகங்கள் கொண்டு நூலகங்கள் தொடங்கப்பட உள்ளது. நாளை மறுதினத்துக்குள் நூலகத்தை அமைத்து தயார் நிலையில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில இந்த நூலகத்தில் பணியாற்ற நாள் ஒன்றுக்கு 315 ரூபாய் ஊதியத்தில் நூலகர்கள் நியமிக்கப்பட உள்ளார்களாம். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த நூலகங்கள் திறந்திருக்கும் என அதிகாரிகள் கூறினர்.

English summary
46 schools become a library will next days in tamilnadu, list out of schools
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X