சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் வேகமாக உயரும் கொரோனா.. 20 நாளில் 48 சதவீதம் உயர்வு.. ஒரே நாளில் 37 ஆயிரம் பேர் பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் கடந்த 20 நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு 48 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 37,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி 6.05 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு, ஜூலை 20-ஆம் தேதி அன்று 11.54 லட்சமாக உயர்ந்துவிட்டது.

48% of Corona patients increased in the past 20 days.

அதாவது 20 நாட்களில் 48 சதவீதம் கொரோனா நோயாளிகள் இந்தியாவில் அதிகரித்துவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 37,148 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் 587 பேர் மரணமடைந்துள்ளார்கள்.

மொத்தமுள்ள 11.55 லட்சம் கேஸ்களில் 4.02 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 7.24 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்கள். இதுவரை 28,084 பேர் மரணமடைந்துள்ளார்கள்.

ஜூலை 20-ஆம் தேதி வரை இதுவரை 1.43 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 3.33 லட்சம் பேர் நேற்று சோதனை செய்யப்பட்டனர். டெல்லியில் 954 புதிய கொரோனா கேஸ்களால் அங்கு மொத்த எண்ணிக்கை 1.23 லட்சமாக உயர்ந்தது.

ஒரு நாள் பாதிப்பில் இந்தியா 2வது இடம், ஒரு நாள் அதிக மரணத்திலும் 2வது இடம்.. டாப் 10 நாடுகள். ஒரு நாள் பாதிப்பில் இந்தியா 2வது இடம், ஒரு நாள் அதிக மரணத்திலும் 2வது இடம்.. டாப் 10 நாடுகள்.

டெல்லியில் புதிய கேஸ்கள் 3 இலக்கங்களில் வருவது இதுவே முதல்முறையாகும். பொதுவாக இங்கு புதிய கேஸ்கள் 1000 முதல் 2000 வரை இருக்கும். தேசிய அளவில் சமூக பரவலுக்கான ஆதாரம் ஏதும் இல்லை.

குஜராத்தில் உள்ள அகமதாபாத், மும்பையின் மத்திய பகுதிகளிலும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

Recommended Video

    Oxford-AstraZeneca Corona Vaccine : 3 Important Updates | Oneindia Tamil

    ஒரு நாள் பாதிப்பில் இந்தியா 2வது இடம், ஒரு நாள் அதிக மரணத்திலும் 2வது இடம்.. டாப் 10 நாடுகள்.

    English summary
    48% of Corona patients increased in the past 20 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X