சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு இந்த ஆண்டு மருத்துவ விருதுகள்.. உலக தமிழ் சங்கங்கள் அசத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து வழங்க உள்ள 4ஆம் ஆண்டு மருத்துவ விருது விழாவில். கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து பல்வேறு துறை சார்ந்த அமைப்புகளை உருவாக்கியுள்ளது. அதில் மருத்துவத்துறையில் உலகெங்குமுள்ள தமிழ் மருத்துவர்கள், மருத்துவமனைகள் போன்றவைகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. அதில் உலகெங்குமுள்ள தமிழ் மருத்துவர்கள் தங்களுடைய அனுபவத்தை பயிற்சி மருத்துவர்களுக்கு பகிர்ந்து, அதன்மூலம் பல உயிர்களை காப்பாற்ற வேண்டும் என உயரிய நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக மருத்துவத்துறையில் சாதனை புரிந்து சிறந்து விளங்கும் மருத்துவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

4th annual medical excellence awards -2020 accolade to corona warriors

இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ் மருத்துவர்கள் நிகழ்வில் பங்கு பெற முடியவில்லை என்றாலும் தங்களின் மருத்துவ குறிப்புகளை நம் அமைப்பு வெளியிடும் மலரில் வெளியீடு புத்தகமாகவும் E-Book வெளியீடாகவும் கண்டுவருகிறது.

இவ்வாண்டு கொரானா பேரிடர் காலத்தில் மருத்துவத்துறையில் முன் களப்பணி ஆற்றிய செயற்பாட்டாளர்களுக்கு குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், பத்திரிக்கைத் துறை, தன்னார்வ அமைப்புகள், உறவினர்களால் இறுதிச் சடங்கு செய்ய முடியாதவர்களுக்கு இறுதி சடங்கு செய்யும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் கொரானா விழிப்புணர்வு செய்த திரைப்பட விளம்பர தூதர்கள் ஆகியவர்களுக்கு 2020ஆம் ஆண்டு மெடிக்கல் எக்ஸன்ஸ் அவார்ட் வழங்கப்பட உள்ளது.

இவ்விழாவில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலாளர் ஆகியவர்கள் கலந்துகொண்டு சென்னையில் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி சனிக்கிழமை மாலை விருது வழங்கி கவுரவிக்க உள்ளது.

அப்பவே 16 அடி பாய்ந்த ராம்விலாஸ் பாஸ்வான்.. மகன் சிராக் 32 அடி பாய்ந்தே ஆகணும்.. சாதிப்பாரா? அப்பவே 16 அடி பாய்ந்த ராம்விலாஸ் பாஸ்வான்.. மகன் சிராக் 32 அடி பாய்ந்தே ஆகணும்.. சாதிப்பாரா?

இவ்விழாவில் நோக்கம் எந்த சூழ்நிலையிலும் முன் களப்பணியில் செயல்பட்டு வரும் மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இவ்விழா அமைய உள்ளது. இது போன்ற நிகழ்வுகளால் மக்களுக்கு சமூக சேவை செய்ய எண்ணம் வரும் என உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் செல்வகுமார் கூறினார

English summary
world tamil chamber of commerce and global organisations of tamil origin presents 4th annual medical excellence awards -2020 accolde to corona warriors at 17th oct 2020/ chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X