சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா: தமிழகத்தில் ஒரேநாளில் 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6,037 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மேலும் கொரோனாவால் ஒரே நாளில் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் இருந்து வருகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில்தான் கொரோனாவுக்கு தமிழகத்தைவிட அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5,914 patients test positive; 6,037 recover from coronavirus in TamilNadu

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 5914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு 6,037 பேர் குணமடைந்தும் உள்ளனர். இன்னொரு பக்கம் கொரோனாவால் மொத்தம் 114 பேர் ஒரே நாளில் உயிரிழந்தும் உள்ளனர்.

இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்தது. கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் 2-வது இடம். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிகை 2,44,675 ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனாவை குணப்படுத்துகிறதா அரிப்பு மருந்து.. ஆச்சர்யப்படுத்தும் உபி.. தீவிரமாகும் சோதனைகொரோனாவை குணப்படுத்துகிறதா அரிப்பு மருந்து.. ஆச்சர்யப்படுத்தும் உபி.. தீவிரமாகும் சோதனை

தமிழ்நாட்டில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,000-த்தை தாண்டியது. இன்றுடன் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,041 ஆகும். தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 53,099 மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
5,914 patients tested positive for coronavirus in TamilNadu on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X