சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும் - வானிலை மையம்

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகஅடுத்த 48 மணிநேரத்திற்கு மதுரை, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகஅடுத்த 48 மணிநேரத்திற்கு மதுரை, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 28ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. சென்னை மட்டுமல்லாது பல மாவட்டங்களிலும் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

5 districts including Madurai Virudhunagar will receive heavy rains - Chennai met office

வடகிழக்குப் பருவமழை தாமதமாகத் துவங்கினாலும் இயல்பான மழை கிடைப்பதற்கான சூழல்கள் இருப்பதாகச் சென்னை மண்டலம் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கணித்துள்ளனர். வளிமண்டல சுழற்சி காரணமாகவும் பருவமழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகஅடுத்த 48 மணிநேரத்திற்கு மதுரை, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். சென்னை நகர்பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணிநேரத்தில் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. விமான நிலையத்தில் 8 செமீ மழையும், திருமங்கலம்,வாலிநோக்கம், வத்ராயிருப்பு, மதுரை தெற்கு பகுதியில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

English summary
The Chennai Meteorological Department has forecast heavy rains in Madurai, Tenkasi, Virudhunagar, Tirunelveli and Ramanathapuram districts for the next 48 hours due to the prevailing atmospheric circulation in the Tamil Nadu coast and adjoining southwestern Bay of Bengal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X