சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஹேட்ஸ் ஆப்".. எம்பிக்களான 5 இலக்கியவாதிகள்.. அத்தனை பேரும் திமுக கூட்டணி... வாவ்..!!

Google Oneindia Tamil News

சென்னை:தமிழகத்தில் இலக்கியவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்ற அடிப்படையில் 5 பேர் எம்பிக்களாக்கி இருக்கின்றனர்.

தமிழகத்தில் அரசியலுக்கும், இலக்கியத்துக்கும் ஒரு நீண்டகால தொடர்பு உண்டு. திரு விளையாடல் படத்தின் தருமியின் வசனம் போல தமிழக அரசியலில் பிரிக்க முடியாத ஒன்று. லோக்சபா தேர்தலில், எழுத்துலக, இலக்கிய உலக தொடர்பில் இருக்கும் 5 பேர் எம்பிக்களாகி இருக்கின்றனர். அதில் குறிப்பிடத்தக்க அம்சம்... அந்த ஐவருமே திமுக மற்றும் அதன் கூட்டணியில் இருப்பவர்கள்.

திமுக சார்பில் கனிமொழி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய இலக்கிய வாதிகள் தேர்தலில் களம் கண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிட்டார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான ரவிக்குமார் ஆகியோர் களம் கண்டார். காங்கிரஸ் கட்சியின் சார்பில், எழுத்தாளரும், அரசியல் வாதியுமான ஜோதிமணி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார்.

செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்! செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!

தூத்துக்குடியில் கனிமொழி

தூத்துக்குடியில் கனிமொழி

தூத்துக்குடியில் களம் கண்ட கவிஞர் கனிமொழி. இவருக்கு அறிமுகம் தேவையில்லை. திமுக தலைவர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் மகள். கவிஞர். எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ஆளுமையாளர். 2 முறை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர்.

எம்பியானார்

எம்பியானார்

மகளிர் முன்னேற்றம், பெண்களுக்குகான முன்னேற்றம், திருநங்கைகளின் உரிமைகள் பல தளங்களில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவர். 10% பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வலுவாக வாதிட்டவர் என்ற பெயர் அவருக்கு இருக்கிறது. தற்போது தூத்துக்குடி தொகுதியில் இருந்து எம்பியாகி லோக்சபா செல்கிறார்.

பெயர் மாற்றிக் கொண்டார்

பெயர் மாற்றிக் கொண்டார்

அடுத்து சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். திமுகவில் முன்னாள் அமைச்சர் தங்க பாண்டியனின் மகள். தமிழ் மீது கொண்ட ஆர்வம், பற்று காரணமாக தமது பெயரை தமிழச்சி தங்க பாண்டியன் என்று மாற்றிக் கொண்டவர்.

கட்டுரைகள், நூல்கள்

கட்டுரைகள், நூல்கள்

தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளராக தேர்தல் அரசியலில் முதல் முறையாக கால் பதித்திருக்கிறார் தமிழச்சி தங்க பாண்டியன். எஞ்சோட்டுப் பெண், வனப்பேச்சி, பேச்சரவம் கேட்டிலையோ, மஞ்சணத்தி உள்ளிட்ட கவிதை நூல்களையும், கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார். அவரது சிறுகதைகள் பிரபல தமிழ் வார இதழ்களில் வெளியாகி இருக்கிறது.

பிசாசு பாடல்

பிசாசு பாடல்

சமூக ஆர்வலர், இலக்கியவாதி என்ற பல களங்களில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். பலருக்கும் தெரியாது.. இவர் திரைப்படத்துக்கும் பாடல் எழுதி உள்ளார் என்று. பிசாசு என்ற படத்தில் வரும் போகும் பாதை தூரமில்லை என்ற ஹிட் பாடல் இவர் எழுதியது தான்.

பிரச்சாரம் முறியடிப்பு

பிரச்சாரம் முறியடிப்பு

தற்போது தென்சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் திமுக சார்பில் வெற்றி கனியை பறித்திருக்கிறார். அத்தொகுதியில் எம்பியாக இருந்த, அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் வெளியூர் வேட்பாளர், தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர் என்ற பிரச்சாரத்தை முறியடித்திருக்கிறார்.

சாகித்ய அகாடமி விருது

சாகித்ய அகாடமி விருது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக மதுரை லோக்சபா தொகுதியிலிருந்து களம் கண்டவர் எழுத்தாளர் சு.வெங்கடேசன். காவல் கோட்டம் என்ற தன் முதல் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். வேள்பாரி, வைகை நதி நாகரிகம் என வரலாற்று நூல்களை எழுதியவர். கீழடி அகழ்வாய்வில் பாஜக ஆட்சியில் ஏற்பட்ட அரசியல் தலையீடுகளை உலக அரங்ககிற்கு எடுத்துச் சென்றவர். அவர் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை வீழ்த்தி நாடாளு மன்றத்துக்கு அடி எடுத்து வைத்திருக்கிறார்.

தலித்திய அரசியல்

தலித்திய அரசியல்

விழுப்புரம் லோக்சபா தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டவர் ரவிக்குமார். இலக்கிய உலகில் இவருக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. அனைவராலும் வெகு இயல்பாக அறியப்படுபவர். தலித்தியம், ஈழம், பெண்ணியம், சூழலியல் என பல கட்டுரைத் தொகுப்புகளை படைத்தவர். இன்றளவும் மணற்கேணி என்ற ஆய்விதழை நடத்தி வருபவர். அதிமுக வேட்பாளர் வடிவேல் ராவணனை வெற்றி கண்டு, லோக்சபாவுக்குள் நுழைகிறார்.

நாவல்களை படைத்தவர்

நாவல்களை படைத்தவர்

கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் ஜோதிமணி. உட்கட்சியில் பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே தொகுதியில் வேட்பாளர் என்ற அறிவிப்பை கைப்பற்றியவர். சித்திரக்கூடு, ஒற்றைவாசனை என்ற நாவல்களை படைத்தவர். நீர் பிறக்கும் முன் என்ற தன் அனுபவப் பகிர்வு நூல் ஒன்றையும் எழுதி இருக்கிறார். தொகுதி எம்பி, துணை சபாநாயகர் தம்பி துரையை வீழ்த்தியிருக்கிறார்.

மாற்றங்கள் வரும்

மாற்றங்கள் வரும்

எழுத்தாளர்கள் கூர்மையான சிந்தனை, நேர் கொண்ட பார்வை, பரந்த மனப்பான்மையுடன் செயல்படுவர்கள் என்பது பொதுவாக சொல்லாடல். அத்தகைய செயல்பாடுகளை மக்கள் மன்றமான நாடாளுமன்றத்தில் அரங்கேற்றி மக்கள் நலன்களுக்காக பாடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதை நம்பலாம்.

English summary
There are 5 mps elected from tamilnadu, especially dmk and their allies are from literature field.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X