சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக தோல்வியை இப்படி கொண்டாடுகிறார்களே மக்கள்.. ஏன்?

ட்விட்டரில் பாஜகவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: 5 மாநில தேர்தல் முடிவை வைத்து நெட்டிசன்கள் பாஜகவை விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்.

5 மாநில தேர்தலின் முடிவுகள் முழுசும் வெளிவருவதற்குள், ட்விட்டரில் மக்கள் அலப்பறையில் இறங்கி விட்டார்கள். முன்பு "கோ பேக் மோடி"க்கு பதிவிட்டது போலவே, இப்போதும் மோடியின் போட்டோவை போட்டு கமெண்ட்டுகளை விதவிதமாக தெறிக்க விட்டு வருகிறார்கள்.

தமிழக மக்களுக்கு மோடியின்மேல் இவ்வளவு கோபம் இருக்க என்ன காரணம்? நாட்டு மக்களுக்கு அவர் தேர்தல் அறிவிப்புகளை நிறைவேற்றாமல் உள்ளது பொதுவான காரணம்.

மக்கள் சந்தோஷம்

மக்கள் சந்தோஷம்

ஆனால் தமிழக நலன்களை மத்திய ஆட்சி தொடர்ந்து புறக்கணிக்க ஆரம்பித்தபோதே மோடிமேல் நம் மக்களுக்கு ஆத்திரமும், கோபமும், எதிர்ப்பும் அதிகமானது. அதன்விளைவுதான், 5 மாநிலங்களில் தேர்தல் முடிவு வெளியிட்டதற்கு தமிழகத்தில் அப்படிக் கொண்டாடி வருகிறார்கள் மக்கள். அப்படி ஒரு சந்தோஷத்தை மக்கள் மத்தியில் பார்க்க முடிகிறது.

தலையில் துண்டு

தலையில் துண்டு

ஒரு மீமில், மோடி தலையில் துண்டை போட்டு கப்பல் கவிழ்ந்த மாதிரி இருக்கிறார். மற்றொரு போட்டோவில் ஸ்கிரீன் பின்னால் ஒளிந்து கொண்டு பார்க்கிறார் மோடி. மற்றொன்றில், அமித்ஷாவும், மோடியும் எப்படி தேர்தலில் தோற்றோம் என்று பேசி கொண்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் போட்டோக்களை பதிவிட்டதுடன், அதன்கீழ் கமெண்ட்களையும் போட்டு நெட்டிசன்கள் இணையத்தையே சூடாக்கி விட்டுள்ளனர். அதில் உள்ள சில ட்வீட்கள் இதோ:

மீண்டும் தோற்க வாழ்த்துகள்

மீதம் இருக்க எல்லா எலக்‌ஷன்லயும் வெற்றிகரமான தோல்வி அடைய வாழ்த்துகள் சொல்றேன்ங்க.
நான் #பாஜக வா சொல்லலைங்கோ.

ராகுல் காந்தி

பாஜகவை விமர்சிக்கும் அளவிற்கு அவர்கள் படுதோல்வி அடையவில்லை. அதே சமயம் @RahulGandhi அவர்கள் @INCIndia கட்சியின் தலைவரான பின்னர் அவர் ஈட்டிய மிகப்பெரிய வெற்றி இது. இந்த வெற்றியின் மூலம் கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு #Rahulgandhi மீது நம்பிக்கை வருமா ?என்பது தான் கேள்வி.

இது வெறுப்பால் வந்த ஓட்டு

நிஜமாகவே #காங்கிரஸ் ஓட்டு வாங்கல.
#பாஜக மேல இருக்க கடுப்புல வேற வழி இல்லாம வந்தது

போட்டாஷாப்பைத் தவிர்க்கவும்

#பாஜக நிலைமை படு மோசம்! இந்த தேர்தல் முடிவினை 2019 தேர்தலுக்கான முன்னோட்டமாக கருத வேண்டும் . இனிமேலாவது வளர்ச்சியை போட்டாசாப்பில் காட்டுவதை விடுத்து நிஜத்தில் காட்டுங்கள்

ஆஹா!

முடிஞ்ச வரைக்கும் இன்னைக்கே பெட்ரோல், டீசலெல்லாம் ஃபில் பண்ணிக்கோங்க... இல்லைன்னா ஃபீல் பண்ணுவீங்க..

எங்க வண்டியைக் காணோம்

தமிழக பாஜக தலைமை அலுவலகம் யாருமே இல்லாமல் ஈ அடித்துகொண்டிருக்கிறது. அந்த போட்டோவை போட்டு, "எங்கடா இங்க இருந்த வண்டிய காணோம்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

English summary
Five State Elections Counting Today. Congress leading in many. So, public comments on twitter about bjp's negative results
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X