சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட.. தேர்தல் வெற்றியை கடைசியில் தமிழகத்தில் கொண்டாடும் எதிர்க்கட்சிகள்.. எப்படின்னு பாருங்க!

பாஜகவிற்கு எதிராக ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றியை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் சேர்ந்து தமிழகத்தில் கொண்டாட வாய்ப்பு கைகூடி வந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவிற்கு எதிராக ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றியை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் சேர்ந்து தமிழகத்தில் கொண்டாட வாய்ப்பு கைகூடி வந்துள்ளது.

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் கிட்டத்தட்ட வெளியாகிவிட்டது. மிசோரம் மாநிலத்தில் மிசோரம் மக்கள் முன்னணி முன்னிலை வகிக்கிறது. ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த மாபெரும் தேர்தல் வெற்றியை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் கொண்டாட நிறைய வாய்ப்புள்ளது.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி

பாஜகவிற்கு எதிராக தனியாக களமிறங்கி இருக்கும் கட்சிதான் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி. நாடாளுமன்ற தேர்தலுக்காக இது இன்னும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணையவில்லை. ஆனாலும் எப்போது வேண்டுமானாலும் இந்த கட்சி எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைந்துவிடும் என்கிறார்கள்.

சந்தோசத்தை எதிர்க்கட்சிகள்

சந்தோசத்தை எதிர்க்கட்சிகள்

தெலுங்கனா ராஷ்டிரிய சமிதி உட்பட காங்கிரஸ், தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்த தேர்தல் முடிவுகளை பார்த்து சந்தோசம் கொண்டு இருக்கிறது. பாஜகவின் தோல்வி இந்த கட்சிகளை புத்துணர்ச்சி பெற வைத்துள்ளது.

தமிழகத்தில் சந்திக்கிறது

தமிழகத்தில் சந்திக்கிறது

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மேலே குறிப்பிட்ட கட்சிகளும், காங்கிரஸும் தமிழகத்தில் விரைவில் சந்திக்க உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் கருணாநிதி சிலை வரும் 16-ம் தேதி திமுக சார்பாக நடக்கும் விழாவில் திறக்கப்பட உள்ளது. இதற்கான விழாவிற்கு மேலே குறிப்பிட்ட எதிர்க்கட்சிகள் எல்லாம் கலந்து கொள்கிறது. தேர்தல் வெற்றிக்கு பின் இந்த கட்சிகள் ஒன்றாக சந்திக்கும் முதல் விழா திமுக நடத்தும் இந்த விழாதான்.

கொண்டாட்டமாக இருக்க போகிறது

கொண்டாட்டமாக இருக்க போகிறது

அதனால் இந்த விழா கொண்டாட்டமாக இருக்க போகிறது. நேற்றுதான் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்தது. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் இதனால் தமிழகத்தில் நடக்கும் கருணாநிதி சிலை திறப்பு விழா கலந்து கொள்வதால் அந்த விழா கோலாகலமாக இருக்க போகிறது. சோனியா காந்தி வருகை தரும் விழாவில் பாஜக தலைவர்கள் யாரும் கலந்து கொள்ள போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
5 state election results: Opponents including Congress may celebrate the victory against BJP in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X