சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை பிறந்தநாள்.. இன்று பாஜகவிற்கு எதிராக கருத்து.. ரஜினியின் திடீர் மனமாற்றம்.. என்ன பின்னணி?

பாஜக செல்வாக்கு இழந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு இருக்கும் கருத்து பெரும் விவாதத்தை உருவாக்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    செல்வாக்கை இழந்து விட்டது பாஜக: ரஜினிகாந்த் பேச்சு-வீடியோ

    சென்னை: பாஜக செல்வாக்கு இழந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு இருக்கும் கருத்து பெரும் விவாதத்தை உருவாக்கி உள்ளது.

    ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றது. பாஜக கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் பெரிய தோல்வியை இந்த தேர்தலில் சந்தித்துள்ளது. இந்த தேர்தல் தோல்வி காரணமாக பாஜகவினர் பெரிய அதிர்ச்சியில் உள்ளனர்.

    டிமானிடைசேஷன் ஆதரவு

    டிமானிடைசேஷன் ஆதரவு

    ரஜினிகாந்த் பாஜகவிற்கு முதலில் ஆதரவாக கொடுத்த குரல் டிமானிடைசேஷன் சமயத்தில்தான். அப்போது ரஜினிகாந்த் ''வாழ்த்துகள் மோடி ஜி, புதிய இந்தியா பிறந்தது'' என்று குறிப்பிட்டு இருந்தார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    முக்கியமான இடங்களில் ஆதரவு

    முக்கியமான இடங்களில் ஆதரவு

    அதைத்தொடர்ந்து ரஜினி பல இடங்களில் மத்திய அரசுக்கும் மத்திய அரசுக்கு நெருக்கமாக இருக்கும் மாநில அரசுக்கும் ஆதரவாக பேசினார். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் கூட மாநில அரசுக்கு ஆதரவாக பேசினார். இதற்கு தமிழக பாஜக தலைவர்கள் வரவேற்பு அளித்து இருந்தனர்.

    யார் பலசாலி

    யார் பலசாலி

    அதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டியில், பாஜகவை பலசாலி என்று குறிப்பிட்டு இருந்தார். அதில், 10 கட்சிகள் கூட்டணி வைத்து ஒரு கட்சியை எதிர்த்தால் 10 பேர் பலசாலியா ஒரு ஆள் பல சாலியா என்று கேள்வி கேட்டு இருந்தார். இதன் மூலம் ரஜினி மறைமுகமாக பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.

    இன்று கருத்து

    இன்று கருத்து

    இந்த நிலையில் ரஜினி பாஜக குறித்து இன்று வெளியிட்ட கருத்தில், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜக செல்வாக்கு இழந்ததை காட்டுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு, என்று பாஜகவிற்கு எதிராக 5 மாநில தேர்தல் முடிவுகள் என்று தெரிவித்துள்ளார்.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    ரஜினி பழைய பேட்டிகளுக்கும் இன்று அளித்த பேட்டிகளுக்கும் இடையில் பெரிய பயணம் செய்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். பாஜகவிற்கு எதிராக மக்கள் இடையே நிலவும் எதிர்ப்பலைகளை ரஜினி உணர்ந்ததாக தெரிகிறது. இதனால்தான் ரஜினி முதல்முறை பாஜகவை எதிர்த்து இப்படி பேசியுள்ளார் என்று கூறுகிறார்கள்.

    பாஜக பெரிய அதிர்ச்சி

    பாஜக பெரிய அதிர்ச்சி

    இது பாஜக தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. நாளை பிறந்தநாளை வைத்துக்கொண்டு ரஜினி வெளிப்படையாக பாஜகவிற்கு செல்வாக்கு இல்லை என்று கூறி இருப்பதை பாஜகவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாளை ரஜினி அரசியல் கட்சி குறித்து தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வந்தது. ரஜினியை வைத்து பாஜக கண்ட பல கனவுகள் இதனால் நொறுங்கும் நிலைக்கு சென்றுள்ளது.

    English summary
    5 state election results: Rajini Kanth's criticism on BJP erupts new fire in politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X