சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு எதிரொலி : பெட்ரோல்,டீசல் விலையில் 6வது நாளாக மாற்றமில்லை

பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 6வது நாளாக எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் இன்று பெட்ரோல், டீசல் விலை எந்த வித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. சென்னையில் பெட்ரோல், லிட்டர் 93 ரூபாய் 11 காசுகளாகவும், டீசல் லிட்டர் 86 ரூபாய் 45 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டது. 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் கடந்த 6 நாட்களாக எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் - டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்த நிலையில் தற்போது அவை தினசரி என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகின்றன.

5 States Assembly Election : Petrol and diesel prices have not changed for the 6th day

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கடந்த ஆண்டு மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

எதிர்கட்சியினரின் போராட்டம், பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு கடந்த ஜனவரியில் இருந்து மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. தினசரியும் பெட்ரோல் டீசல் உயர்ந்த வேகத்தைப் பார்த்தால் மக்களின் அச்சம் அதிகரித்தது. காரணம் இந்தியாவின் பல மாநிலங்களில் ஒரு லிட்டர் 100 ரூபாயை தாண்டி விற்பனையானது.

இந்த விலை உயர்வுக்கு தடை போடும் வகையில் வெளியானது சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு. 5 மாநில சட்டசபைத் தேர்தல் தேதி கடந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட்டதை அடுத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. 6 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. சென்னையில் பெட்ரோல், லிட்டர் 93 ரூபாய் 11 காசுகளாகவும், டீசல் லிட்டர் 86 ரூபாய் 45 காசுகளாகவும் விற்பனையாகி வருகிறது.

உலகத்தில் அதிகரிக்கும் கொரோனா 11.62 கோடி பேர் பாதிப்பு - 9.18 கோடி பேர் மீண்டனர் உலகத்தில் அதிகரிக்கும் கொரோனா 11.62 கோடி பேர் பாதிப்பு - 9.18 கோடி பேர் மீண்டனர்

ஏப்ரல் மாத இறுதி வரை பெட்ரோல் டீசல் விலை உயர்வில் எந்த வித மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

English summary
Petrol and diesel prices across the country today remain unchanged. In Chennai, petrol was sold at Rs 93 for 11 paise a liter and diesel at Rs 86 for 45 paise a liter. Petrol and diesel have been sold without any change for the last 6 days as assembly elections have been declared in 5 states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X