சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மருத்துவ படிப்பு- அகில இந்திய கோட்டாவில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு- ஜூலை 27-ல் ஹைகோர்ட் தீர்ப்பு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்குகளின் விசாரணையை முடித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 27ல் தீர்ப்பு வழங்கப்டும் என அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திராவிடர் கழகம், திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொரடப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 % இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

50% OBC reservation for medical courses: Madras HC will pass order on July 27

மேலும், மருத்துவ படிப்புகளில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இன்று இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.ப்பி.சாஹி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி வில்சன், உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும். இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது. கடந்த 4 வருடங்களில் 3580 இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு வழங்காததால் 2700 க்கும் மேற்பட்ட ஓபிசி தமிழக மாணவர்கள் இடம் பறிபோனது.

மருதமலை முருகரை இழிவுபடுத்துவதா? அமைச்சர் வேலுமணி கண்டனம்- பெரியார் சிலை அவமதிப்புக்கும் எதிர்ப்புமருதமலை முருகரை இழிவுபடுத்துவதா? அமைச்சர் வேலுமணி கண்டனம்- பெரியார் சிலை அவமதிப்புக்கும் எதிர்ப்பு

இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு திருடி கொண்டிருக்கிறது என்றார். தமிழக அரசின் சார்பாக ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு முறை இருக்கும் போது மத்திய அரசு 27% இடஒதுக்கீடு வழங்குவது தவறானது. தமிழகத்தில் தான் அதிகளவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் சாதி வாரியான மக்கள் தொகையின் அடிப்படையில் 50 % என்ற இடஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது.

எஸ்.சி/எஸ்.டிக்கு இட ஒதுக்கீடு வழங்கும் போது ஒ.பி.சி'க்கு இட ஒதுக்கீடு மறுப்பது சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது. மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், மருத்துவ மேற் படிப்புகளில் இட ஒதுக்கீடு முறை பின்பற்ற கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் விதி உள்ளது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும். அதே நேரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவு படியே எஸ் சி/எஸ்.டி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுறது. மருத்துவ மேற்படிப்புகளில் ஒபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பதற்கான பல உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டப்பட்டது என கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மாநில அரசுகளின் ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என்ற முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏன் மத்திய அரசு கட்டுப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை ஜூலை 27ம் ந் தேதி வழங்குவதாக தெரிவித்தனர்.

English summary
The Madras High Court will pass order on 50% OBC reservation for medical courses cases on July 27.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X