சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் ஓட ரெடியாகும் பஸ்கள்.. தொழில்நுட்ப பணியாளர்களில் 50% பேர் பணிக்கு திரும்ப உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகர பேருந்து தொழில்நுட்ப பணியாளர்களில் 50% பேர் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே சென்னையில், பேருந்து சேவைகள் துவங்க உள்ளதா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    சென்னையில் ஓட ரெடியாகும் பேருந்துகள்... தொழில்நுட்ப பணியாளர்களுக்கு புதிய உத்தரவு
    50% of Chennai corporation Bus Technical Workers have been ordered to come back

    இதுகுறித்து சென்னை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையை பாருங்கள்:

    நமது மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 3554 பேருந்துகளில், அத்தியாவசிய பணிகளுக்காக இயக்கப்படுகின்ற சுமார் 300 பேருந்துகளை தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளும், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, பொதுமுடக்கம் செய்யப்பட்டுள்ளதால், பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சின்னத்திரை ஷூட்டிங்கில் அதிகபட்சம் 60 பேருக்கு அனுமதி.. முதல்வர் அதிரடி.. நாளை முதல் ஸ்டார்ட் சின்னத்திரை ஷூட்டிங்கில் அதிகபட்சம் 60 பேருக்கு அனுமதி.. முதல்வர் அதிரடி.. நாளை முதல் ஸ்டார்ட்

    அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில், 1775 பேருந்துகளில், ஹெச்எஃப்சி மற்றும் எஃப் சி ஆகியவை 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு உள்ளாக காலாவதி ஆகின்றன.

    எனவே மேற்கண்ட பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு செய்து ஃபிட்னஸ் சான்றிதழ் வாங்க வேண்டி உள்ளதால், எம்டிசி (டபிள்யூ) எஃப்சி யூனிட்டுகள் மற்றும் ஆர்சி யூனிட்டுகளில் பணிபுரியும் பணியாளர்கள், இரண்டு நாளுக்கு ஒருமுறை 50% அடிப்படையில் உடனடியாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மேலும், பணியாளர்கள் அனைவரும் கீழ்க்கண்ட நடை முறைகளைக் கட்டாயம் கடைபிடிக்கவும்.

    • முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்
    • கை உறை கட்டாயம் அணிய வேண்டும்
    • கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்
    • கை சானிடைசர் பயன்படுத்த வேண்டும்

    தொழிற்கூடங்கள், பணி செய்யும் இடங்கள், கேன்டீன், ஓய்வு நேரக் காப்பாளர் அறை, மற்றும் பண்டக சாலைகளில் கட்டாயம் 3 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும், பணியாளர்களுக்கு ஏதேனும் உடல் நிலை சரியில்லை என்றால், முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு மேலாண் இயக்குனர் கணேசன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    English summary
    50% of Chennai corporation Bus Technical Workers have been ordered to come back. Therefore, there is an expectation that bus services will start in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X