சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அண்ணே கீழே பணம் பாருங்க.. என்னது பணமா.. வண்டியை விட்டு இறங்கிய பூமிநாதன்.. ரூ. 50,000 அவுட்!

நபரை திசை திருப்பி ரூ.50 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: வெறும் 10 ரூபாய் நோட்டை ரோட்டில போட்டுட்டு ஆள் அசந்த நேரத்தில 50,000 ரூபாயை அபேஸ் பண்ண ஆசாமியைதான் திருவான்மியூர் போலீசார் தேடி வருகிறார்கள்.

கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவருடைய வேலையே தண்டலுக்கு பணம் கொடுப்பதுதான்.

நேற்று இவர் தனது சைக்கிளில் திருவான்மியூர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றார். தன் கணக்கில் இருந்த 50 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு அப்படியே மார்க்கெட் பக்கம் போனார். வீட்டுக்கு தேவையான சில பொருட்களை வாங்கி கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

 கீழே பணம் இருக்கு

கீழே பணம் இருக்கு

கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள புத்து கன்னியம்மன் கோவில் அருகே வரும்போது, பூமிநாதன் பின்னாலேயே ஒருத்தர் வந்தார். அப்போது, பூமிநாதனிடம், "ஏங்க.. உங்க பணம் கீழே விழுந்துருச்சி பாருங்கள் என்றார்.

 10 ரூபாய் நோட்டு

10 ரூபாய் நோட்டு

கீழே பணமா? என நினைத்து பூமிநாதன் சைக்கிளை விட்டு இறங்கினார். அப்போது, ரோடில் 10 ரூபாய் நோட்டுகள் இருந்தது. சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த பணத்தை எடுத்தார். அந்த நேரம் பார்த்து, பின்னால் வந்த நபர் பூமிநாதனிடம் இருந்து பண பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் பைக்கில் பறந்தார்.

 சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமரா

பேங்க்-கில் இருந்து எடுத்த பணம் 50 ஆயிரம் தவிர பாஸ்புக்கும் அந்த பையில்தான் இருந்தது. இதனால் அதிர்ச்சியிடைந்த பூமிநாதன் திருவான்மியூர் போலீசில் புகார் தந்துள்ளார். இது சம்பந்தமாக போலீசாரும் விசாரணையை ஆரம்பித்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் ஆய்வு நடத்தினார்கள்.

 50 ஆயிரம் அபேஸ்

50 ஆயிரம் அபேஸ்

அப்போது, பூமிநாதனிடம் இருந்து பணப்பையை பிடுங்கி கொண்டு பைக்கில் அந்த நபர் ஏறி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் அவர் யார் என தெரியவில்லை. 10 ரூபாயை போட்டு 50 ஆயிரம் அபேஸ் செய்த அந்நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

English summary
50 Thousand Rupees Robbery and Thiruvanmayur Police are investigating
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X