சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாளில் 53 பேர் அடுத்தடுத்து மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் பலி 757 ஆக கிடுகிடு.. பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா தொற்றால் மிக உச்சபட்சமாக ஒரே நாளில் 53 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளார்கள்..

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனாவால் 300க்கும் அதிகமானோர் கொரோனா உயிரிழந்துள்ளனர். முன்பு சென்னையில் மட்டும் தான் அதிகம் பேர் கொரோனாவால் இறந்தார்கள். இப்போது தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் கொரோனாவால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது-

கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது.

34 மாவட்டங்களில் பாதிப்பு.. சென்னையை தொடர்ந்து கடலூர், வேலூர், மதுரையிலும் கிடுகிடு.. முழு லிஸ்ட்34 மாவட்டங்களில் பாதிப்பு.. சென்னையை தொடர்ந்து கடலூர், வேலூர், மதுரையிலும் கிடுகிடு.. முழு லிஸ்ட்

601 பேர் சென்னையில் பலி

601 பேர் சென்னையில் பலி

கொரோனாவால் உயிரிழந்த 757 பேரில் 601 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டில் 49 பேர், திருவள்ளூரில் 37 பேர், காஞ்சிபுரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 697 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பிற பகுதிகளில்

பிற பகுதிகளில்

தமிழகத்தின் சென்னையை தவிர பிற பகுதிகளில் மொத்தம் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்த 53 பேரில், 42 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். திருவள்ளூரில் 3 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், திருவண்ணாமலையில் ஒருவரும், விழுப்புரத்தில் ஒருவரும், திருநெல்வேலியில் ஒருவரும் (34 வயது நபர்) கொரானாவால் உயிரிழந்தனர். இன்று உயிரிழந்த 53 பேரில் 3 பேர் எந்த இணை நோயாலும் பாதிக்கப்படாதவர்கள் என்பது சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாச பிரச்சனை

சுவாச பிரச்சனை

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 53 பேரில் பெரும்பாலானோர் 60 வயதை கடந்தவர்கள் ஆவார். அவர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புடன் கொரோனா பாதிப்பு உறுதியானதால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர். SepticShock/Pneumonia என்று அழைக்கப்படும், உறுப்புகள் செயல் இழப்பு, நிமோனியா காய்ச்சல் போன்றவை உயிரிழப்புக்கு அதிகமாக காரணமாக உள்ளது. இதேபோல் சுவாசத்தில் தோல்வியும் கொரோனாவால் இறப்பதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது

ஆபத்து அதிகம் யாருக்கு

ஆபத்து அதிகம் யாருக்கு

40 வயதை கடந்தவர்கள் உயிரிழப்பு கணிசமாக தினமும் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 5பேர் 40 வயது அல்லது 50 வயதிற்கு உட்பட்டவர்கள் இறந்துள்ளனர். இதேபோல் 50 முதல் 60வயது வரை உள்ளவர்களும் அதிகமாக இறக்கிறார்கள். இன்று 12 பேர் 50 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் கொரோனா தொற்று எளிதில் ஆளாகுவதுடன் கடுமையான பாதிக்கப்படுகிறார்கள். 40 வயதை கடந்தவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

English summary
coronavirus death today 53 : Total number of deaths till date 757.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X